இந்தியன் கிராண்ட் பிரிக்ஸ் பார்முலா ஒன் கார் பந்தயம் ஒத்திவைப்பு

பார்முலா ஒன் கார் பந்தயத்தை முதன்முறையாக இந்தியாவில் நடத்துவதற்கு சர்வதேச ஆட்டோமொபைல் கூட்டமைப்பு(எப்ஐஏ) அனுமதி வழங்கியிருந்தது. இதையடுத்து, இந்தியன் கிராண்ட் பிரிக்ஸ் பந்தயத்தை நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக துவங்கின.
நொய்டாவில் கார் பந்தயத்திற்கான பிரம்மாண்ட ரேஸ் டிராக் அமைக்கும் பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. ரேஸ்களுக்கான டிக்கெட் விற்பனையும் கடந்த மாதம் துவங்கிவிட்டது. இந்தியாவில் முதன்முறையாக பார்முலா ஒன் கார் பந்தயம் நடப்பதால், ரேஸ் பிரியர்கள் ஆர்வமுடன் கார் பந்தயத்திற்கான டிக்கெட்டுகளை வாங்கி வருகின்றனர்.
இந்த நிலையில், இந்தியன் கிராண்ட் பிரிக்ஸ் பந்தயத்தை ஒத்திவைப்பதாக எப்ஐஏ திடீரென அறிவித்துள்ளது. இந்தியாவில் துவங்க இருந்த அதே தேதியில் பஹரைனில் கார் பந்தயம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வரும் டிசம்பரில் இந்தியாவில் கார் பந்தயத்தை துவக்க எப்ஐஏ முடிவு செய்திருப்பதாகவும் தெரிகிறது.
கடந்த மார்ச் மாதம் பஹரைனில் நடக்க இருந்த கார் பந்தயம், அரசுக்கு எதிரான கிளர்ச்சி மற்றும் வன்முறை சம்பவங்களால் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், இந்தியாவில் நடக்க இருந்த தேதியை பஹரைனுக்கு கொடுத்திருப்பதற்கு எப்ஐஏ முன்னாள் தலைவர் உள்பட பலர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications








