ரூ.2.5 லட்சத்தில் சின்ன கார்: மஹிந்திரா திட்டம்

Mahindra Small Car
சென்னை: ரூ.2.5 லட்சம் ஆரம்ப விலையில் 1,000 சிசி திறன் கொண்ட சிறிய காரை அறிமுகப்படுத்த மஹிந்திரா திட்டமிட்டுள்ளது.

உள்நாட்டு சந்தையில் சிறிய கார்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. இதைக்கருத்தில்கொண்டு, விரைவில் சிறிய கார் அறிமுகம் செய்யப்படும் என்று மஹிந்திரா ஆட்டோமோட்டிவ் பிரிவு தலைவர் பவன் கோயங்கோ ஏற்கனவே கூறியிருந்தார்.

இதில், ஒன்று வெரிட்டோ செடான் காரின் சிறிய கார் மாடலாகவும், மற்றொன்று சிறிய காராகவும் இருக்கும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், 1,000 சிறிய காரை அறிமுகப்படுத்துவதற்கான பணிகளை மஹிந்திரா தீவிரப்படுத்தியுள்ளது. இந்த கார் உற்பத்திக்காக ரூ.800 கோடி முதலீட்டில் தமிழகத்தில் புதிய ஆலை கட்டுவதற்கு மஹிந்திரா முடிவு செய்துள்ளது.

பிஆர்ல் குறியீட்டு பெயரில் இந்த காரின் புரோட்டோ டைப் எனப்படும் மாதிரி காரை மஹிந்திரா வடிவமைத்துவிட்டது. 4 உதிரிபாக சப்ளையர்களுக்கு மாதிரி காரின் வடிவத்தை அந்த நிறுவனம் காட்டியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிக மைலேஜ் தரும் வகையில் வடிவமைக்கப்படும் இந்த கார் செவர்லே ஸ்பார்க், மாருதி ஆல்ட்டோ, ஹூண்டாய் சான்ட்ரோ கார்களுக்கு கடும் போட்டியை கொடுக்கும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரூ.2.5 லட்சம் ஆரம்ப விலையில் இந்த காரை அறிமுகம் செய்ய மஹிந்திரா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Most Read Articles
English summary
The country’s largest utility vehicle maker Mahindra is planning to launch a 1,000 cc small car in the Indian market. According to recent media reports, the company has chosen a site in Tamil Nadu to set-up a manufacturing plant with an investment of Rs 800 crore. The new M & M small car will be launched in starting price at Rs.2.5 lakh. where it would have to fight for space with some well established car models like Maruti Alto, Hyundai Santro Xing and Chevrolet Spark.
Story first published: Monday, August 1, 2011, 12:40 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X