விலையுயர்ந்த மஹிந்திரா எலெக்ட்ரிக் கார்! ஆனா விலை ரூ.30 லட்சத்தை கூட தாண்டல!

மஹிந்திரா (Mahindra) நிறுவனத்தின் விலையுயர்ந்த எலெக்ட்ரிக் கார் (Electric Car) ஆக இருப்பினும், எக்ஸ்இவி 9இ (XEV 9e)-க்கு சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனாலேயே இந்த எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் மார்க்கெட்டை விரிவுப்படுத்துவதில் மஹிந்திரா தொடர்ந்து முனைப்பு காட்டி வருகிறது. அந்த வகையில் தற்போது, எக்ஸ்இவி 9இ எலெக்ட்ரிக் காரின் மேம்பட்ட ஆடம்பர பதிப்பாக, சினிலக்ஸ் எடிஷன் (Cineluxe Edition) இன்று (மார்ச் 1) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வெறும் ஆடம்பரத்தைக் கடந்து, நுட்பமான கைவினைத்திறன், அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் கண்கவர் திரையரங்க அனுபவம் ஆகியவை சினிலக்ஸில் ஒருங்கே இணைகின்றன. 2024 நவம்பரில் உலகளவில் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, எக்ஸ்இவி 9இ இந்தியாவில் ஆடம்பர எஸ்யூவி கார்கள் சந்தையின் எதிர்பார்ப்புகளை முழுவதுமாக மாற்றியமைத்துள்ளது. ICOTY 2026-இன் மதிப்புமிக்க 'பசுமை கார் ஆஃப் தி இயர்' விருது உட்பட, இந்தியாவின் விருதுகள் அதிகம் பெற்ற எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் இது ஆகும்.

mahindra xev 9e cineluxe edition electric car

பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பிஸ்னஸ்மேன்கள் போன்ற முக்கிய பிரமுகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று, அவர்களின் விருப்பமான ஆடம்பர எஸ்யூவியாக எக்ஸ்இவி 9இ தனது நிலையை உறுதிப்படுத்தியுள்ளது. புதிய எக்ஸ்இவி 9இ சினிலக்ஸ் எடிஷன், சாடின் கருப்பு (Satin Black) மற்றும் சாடின் வெள்ளை (Satin White) போன்ற பிரத்யேக வெளிப்புற கலர் ஆப்ஷன்களுடன் வந்துள்ளது.

அதேபோல், புதிய செஸ்ட்நட் பிரவுன் (Chestnut Brown) மற்றும் நாக்டியூர்ன் கருப்பு (Nocturne Black) நிற மென்மையான லெதரெட் உள் அலங்காரங்கள் இந்த ஸ்பெஷல் எடிஷன் காரின் உட்புற அழகை உயர்த்துகின்றன. ஒவ்வொரு நுணுக்கமான அலங்கரிப்பும், காரின் உட்பகுதியை ஒரு தனிப்பட்ட ஓய்வறையைப் போல மாற்ற, கவனமாகத் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

mahindra xev 9e cineluxe edition electric car

எக்ஸ்இவி 9இ சினிலக்ஸ் ஸ்பெஷல் எடிசனின் முக்கியமான சிறப்பம்சம், உண்மையான சினிமா அனுபவமாகும். காரின் ஒரு முனையில் இருந்து மறு முனை வரை நீளும் டிரிபிள் எச்டி டிஸ்ப்ளே மற்றும் டால்பி அட்மாஸ் வசதியுடன் கூடிய 16 ஸ்பீக்கர் ஹார்மன் கார்டன் ஆடியோ சிஸ்டம் உள்ளிட்டவை ஸ்டுடியோ தர ஆடியோ-விஷுவல் அனுபவத்தை வழங்குகின்றன.

இன்ஃபினிட்டி ரூஃப் மற்றும் கேபின் விளக்குகள் 1.6 கோடிக்கும் அதிகமான கலர் ஆப்ஷன்களை வழங்குவதால், ஒவ்வொரு பயணத்தையும் மனநிலைக்கேற்ப மாற்றிக்கொள்ளலாம். உயர்தர பேக் த்ரீ (Pack Three) வேரியண்ட்டின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள எக்ஸ்இவி 9இ சினிலக்ஸ் எடிஷன், 79 kWh பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது.

இது 500 கி.மீட்டருக்கும் அதிகமான ரேஞ்சை வழங்குகிறது. இதன் மூலம், ஆடம்பர அனுபவத்தில் எந்தவித சமரசமும் இல்லை என்பதை இந்த ஸ்பெஷல் எடிஷன் கார் உறுதிப்படுத்துகிறது. நீண்ட நெடுஞ்சாலைப் பயணமாக இருந்தாலும் அல்லது நகரத்தில் அமைதியான இரவு நேர பயணமாக இருந்தாலும், எக்ஸ்இவி 9இ சினிலக்ஸ் ஒவ்வொரு பயணத்தையும் கச்சிதமாகவும் அமைதியாகவும் உணர வைக்கிறது.

பிரத்யேக சிறப்பம்சங்களுடன், புதிய எக்ஸ்இவி 9இ சினிலக்ஸ் ஸ்பெஷல் எடிஷன் வழக்கமான எக்ஸ்இவி 9இ பேக் த்ரீ வேரியண்ட்டின் அனைத்து மேம்பட்ட அம்சங்களையும் கொண்டுள்ளது. இதில் ஸ்ட்ரெய்ட் அஹெட் விஷன்எக்ஸ் ஏஆர் ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே (StraightAhead VisionX AR heads-up display), டிரைவர் மற்றும் பயணிகளை கண்காணிக்கும் அமைப்பு (EyeDentity Driver & Occupant Monitoring), ஹேண்ட்ஸ்ஃப்ரீ பார்க் - ஆட்டோ பார்க் அசிஸ்ட் (HandsFree Park - Auto Park Assist) உள்ளிட்டவை அடங்கும்.

இவை மட்டுமின்றி, செக்யூர்360 (Secure360) மற்றும் பல அம்சங்களும் அடங்கும். மேலும், கேம்ப் (Camp), கீப் (Keep) மற்றும் பவுபால் (PawPal) HVAC மோட்கள், கஸ்டம் டிரைவ் மோட்கள் (Custom Drive Modes), டிஜிட்டல் கீ (Digital Key), செக்யூர்360 புரோ (Secure360 Pro), மற்றும் கஸ்டமைஸ் செய்யப்பட்ட பயனர் சுயவிவரங்கள் போன்ற சிந்தனைமிக்க புதிய தொழில்நுட்ப அம்சங்களையும் வழங்குகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதிய எக்ஸ்இவி 9இ சினிலக்ஸ் ஸ்பெஷல் எடிஷனை பற்றி சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், இந்த ஆடம்பரம் உங்களுக்காக மாறுகிறது, மாறாக நீங்கள் அதற்காக மாற வேண்டியதில்லை. இந்த ஸ்பெஷல் எடிஷன் பெரியதாக விளம்பரம் இல்லாமல், வாடிக்கயாளர்களின் நம்பிக்கையை நம்பி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மஹிந்திரா எக்ஸ்இவி 9இ ஏற்கனவே தன்னை நிரூபித்துவிட்ட நிலையில், இவ்வாறான ஆடம்பர ஸ்பெஷல் எடிஷன்கள் அதன் விற்பனையை மேலும் அதிகரிக்கும் என்பது உறுதி.

More from DriveSpark

Article Published On: Sunday, March 1, 2026, 14:16 [IST]
English summary
Mahindra introduces new cineluxe edition in xev 9e electric car check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+