தொழிலாளர் ஸ்டிரைக்: மாருதிக்கு ரூ.450 கோடி இழப்பு

Maruti Strike
மானேசர்: தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டம் காரணமாக மாருதி நிறுவனத்துக்கு இதுவரை 10,200 கார்களின் உற்பத்தியும், ரூ.450 கோடி இழப்பும் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாருதி நிர்வாகத்துக்கும், தொழிலாளர்களுக்கும் இடையில் இதுவரை நடந்த பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளன.

மாநில தொழிலாளர் நல ஆணையம் நடத்திய சமரசங்களை தொழிலாளர்கள் ஏற்காமல், தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை வேலைநிறுத்தத்தை தொடர்வதில் பிடிவாதமாக உள்ளனர்.

இந்த நிலையில், வேலைநிறுத்த போராட்டம் காரணமாக மாருதிக்கு பெருத்த இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த நிறுவனத்தின் குறிப்பிட்ட கார் மாடல்களின் டெலிவிரியில் பாதிப்பு ஏற்படும் என கருதப்படுகிறது.

இதுகுறித்து மாருதி மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:

"தொழிலாளர்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் சில வழிமுறைகளை வகுத்து உள்ளோம்.

ஸ்டிரைக் விதிகளின்படி, வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் தொழிலாளர்களின் சம்பளத்தில் ஒரு வேலைநிறுத்தத்திற்கு 8 நாட்கள் சம்பளத்தை பிடித்தம் செய்வது வழக்கம். ஆனால், நாங்கள் ஒரு வேலை நிறுத்தத்திற்கு 3 நாட்கள் மட்டுமே கணக்கிட்டு சம்பளத்தில் பிடித்தம் செய்வதாக உறுதி கூறியுள்ளோம்.

இதேபோன்று, பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் 11 பேர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை மட்டும் எடுக்கப்படும் என்று கூறியுள்ளோம். இதை ஏற்று வேலைநிறுத்தத்தை தொழிலாளர்கள் முடித்துக்கொள்வார்கள் என்று கருதுகிறோம்.

இந்த போராட்டத்தால் 10,200 கார்களின் உற்பத்தியும், ரூ.450 கோடி இழப்பும் ஏற்பட்டுள்ளது. வேலைநிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது," என்று கூறினார்.

Most Read Articles
English summary
Maruti Suzuki India enters the 12th day in a row with no fruitful result to end the deadlock between the management and strikers. The production halt at the Manesar facility has cost Maruti a volume loss of around 10,200 car units with revenue loss reaching to Rs. 450 crore.
Story first published: Wednesday, June 15, 2011, 14:05 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X