கார் வடிவமைப்பு மையத்தில் புதிதாக 230 பேரை நியமிக்க மாருதி முடிவு

Maruti A-star
டெல்லி: புதிய கார்களை அறிமுகப்படுத்துவதற்கு ஏதுவாக, தனது கார் வடிவமைப்பு மையத்தில் புதிதாக 230 எஞ்சினியர்களை பணி நியமனம் செய்ய இருப்பதாக மாருதி தெரிவித்துள்ளது.

மார்க்கெட்டில் முன்னிலை வகிக்கும் மாருதிக்கு வெளிநாட்டு நிறுவனங்களின் வருகையால் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பல புதிய மாடல் கார்களை களமிறக்க மாருதி முடிவு செய்துள்ளது.

மேலும், மாருதியில் அங்கம் வகிக்கும் ஜப்பானை சேர்ந்த சுஸுகி நிறுவனமும், ஜப்பான் மார்க்கெட்டுக்கு ஏற்ற கார்களை இந்தியாவில் வடிவமைக்க முடிவு செய்துள்ளது.

இதையடுத்து, தனது கார் வடிவமைப்பு மையத்தின் மனிதவளத்தை அதிகரிக்க மாருதி நிறுவனம் முடிவு செய்துள்ளது. தற்போது மாருதி வடிவமைப்பு மையத்தில் 1,070 பணியாளர்கள் பணிபுரிகின்றனர்.

இதை 20 சதவீதம், அதாவது 1,300 பணியாளர்களாக உயர்த்த மாருதி திட்டமிட்டுள்ளது. இதற்காக, விரைவில் 230 புதிய வடிவமைப்பு எஞ்சினியர்களை பணி நியமனம் செய்ய இருப்பதாக மாருதி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
English summary
All this while, the global auto majors who have come to India are looking to eat into its strong base which is small car market. Now it has been reported that the company plans to increase its R&D manpower by over 20 percent to more than 1,300 people in 2011-12 as it looks to become the hub of research activities for parent Suzuki. The reports stated that the company's R&D division is at present working to enhance its capability to develop a complete model in India and it plans to increase spending of the R&D team by multi-fold. The company's R&D team has plans of increasing its manpower from 1,070 numbers to more than 1,300 numbers in FY11-12, according to Maruti Suzuki India (MSI) said in its Annual Report for 2010-11.
Story first published: Friday, August 12, 2011, 12:53 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X