ஜூலையில் மாருதி விற்பனை 25% சதவீதம் சரிவு

ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வரும் பெட்ரோல் விலை, கார் கடன்களுக்கான வட்டி வீதத்தை வங்கிகள் உயர்த்தியது உள்ளிட்ட காரணங்களால், கடந்த இரண்டு மாதங்களாக கார் மார்க்கெட்டில் தேக்க நிலை நீடிப்பதும் மாருதி விற்பனை சரிந்ததற்கு காரணம்.
தவிர, புதிய ஸ்விப்ட் கார் உற்பத்திக்காக பழைய ஸ்விப்ட் காரின் உற்பத்தியை நிறுத்தியதும் முக்கிய காரணமாகியது. மேலும், டிசையர் கார் உற்பத்தியை மானேசரிலிருந்து குர்கான் ஆலைக்கு மாற்றியதாலும், சப்ளையில் தடை ஏற்பட்டது உள்ளிட்ட காரணங்களால் மாருதி விற்பனை சரிந்துள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் 1,00,857 கார்களை விற்பனை செய்திருந்த அந்த நிறுவனம் தற்போது 75,300 கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது.
இந்த நிலையில், விரைவில் புதிய ஸ்விப்ட் கார் அறிமுகப்படுத்த இருக்கிறது. இதற்கு எதிர்பாராத அளவுக்கு புக்கிங் செய்யப்பட்டு வருகிறது. எனவே, புதிய ஸ்விப்ட் காரின் டெலிவிரி துவங்கப்பட்டதும் மாருதி விற்பனை ஓரளவு பழைய நிலைமைக்கு திரும்பும் என்று கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications








