தொழிலாளர் ஸ்டிரைக்கால் மாருதிக்கு ரூ.100 கோடி இழப்பு

Maruti Strike
டெல்லி: தொழிலாளர் வேலைநிறுத்த போராட்டத்தால் மாருதி கார் நிறுவனத்துக்கு இதுவரை ரூ.100 கோடி அளவுக்கு இதுவரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹரியானா மாநிலம், மானேசரில் உள்ள மாருதி கார் தொழிற்சாலையை சேர்ந்த தொழிலாளர்கள் கடந்த சனிக்கிழமை முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், அந்த தொழிற்சாலையில் கார் உற்பத்தி அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது.

நாள்ஒன்றுக்கு 1,200 கார்கள் திறன் படைத்த அந்த தொழிற்சாலையில் மூன்று நாட்கள் உற்பத்தி முடங்கியதால், 1,800 கார்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும், உற்பத்தி இழப்பால் அந்த நிறுவனத்துக்கு இதுவரை ரூ.100 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக மாருதி வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுதவிர, மும்பை பங்கு சந்தையில் அந்த நிறுவனத்தின் பங்குகள் நேற்று இரண்டாவது நாளாக 2 சதவீதம் இறக்கம் கண்டது. வேலைநிறுத்தம் நேற்றுடன் நான்காவது நாளாக தொடரும் நிலையில், தொழிலாளர்களுக்கும் நிர்வாகத்துக்கும் இடையில் நடந்து வரும் பேச்சுவார்த்தைகளில் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படவில்லை.

Most Read Articles
English summary
The labor unrest at Maruti’s Manesar plant enters the day fourth leading to a production loss of about 1,800 car units plus resulting into an approximate suffering of 100 crore rupees ($20 million), revealed by a source from the company.
Story first published: Thursday, June 9, 2011, 12:11 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X