இந்தியாவில் மினி பிராண்டு கார்களை அறிமுகம் செய்ய பிஎம்டபிள்யூ திட்டம்

Min Hatchback car
டெல்லி: இந்தியாவில் மினி பிராண்டு கார்களை அறிமுகம் செய்வது குறித்து பிஎம்டபிள்யூ பரிசீலனை செய்து வருகிறது.

பிரிட்டனை சேர்ந்த மினி நிறுவனம் உயர்வகை கார்களை தயாரிப்பதில் புகழ்பெற்ற நிறுவனமாக திகழ்கிறது.

சொகுசு கார் தயாரிப்பில் கலக்கி வரும் ஜெர்மனியை சேர்ந்த பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் கீழ் துணை நிறுவனமாக மினி நிறுவனம் இயங்கி வருகிறது.

இந்த நிலையில், இந்தியாவில் கார் சந்தை வேகமாக வளர்ந்து வருவதால், மினி பிராண்டு கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய பிஎம்டபிள்யூ திட்டமிட்டுள்ளது.

அதேவளை, அதிக விலை கொண்ட மினி கார்கள் இந்திய சந்தைக்கு ஏற்ற வகையில் இருக்குமா என்பதில் பிஎம்டபிள்யூவுக்கு ஐயம் ஏற்பட்டுள்ளது.

இருப்பினும், மினி பிராண்டை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கு பிஎம்டபிள்யூ முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இதற்கான, சாத்தியக்கூறுகள் குறித்து அந்த நிறுவனம் விரிவாக ஆய்வு செய்து வருகிறது.

தவிர, பிரிட்டனிலிருந்து காரை இறக்குமதி செய்வதில் பல இடர்பாடுகள் இருக்கின்றன. இதற்கு 110 சதவீத இறக்குமதி செலுத்த வேண்டும் என்பதால் காரின் விலையும் இரு மடங்கு கூடுதலாகும்.

எனவே, சென்னையிலுள்ள தனது தொழிற்சாலையில் மினி கார்களுக்காக தனி உற்பத்தி பிரிவு அமைப்பது குறித்தும் பிஎம்டபிள்டயூ தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது.

பிஎம்டபிள்யூ தலைமை பச்சைக்கொடி காட்டினால் அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் மினி கார்கள் இந்தியாவில் தடம் பதித்துவிடும் என்று பிஎம்டபிள்யூ இந்தியா தலைவர் ஆன்டிரியாஸ் சாஃப் கூறினார்.

Most Read Articles
English summary
Mini, the iconic British small car brand, now owned by BMW, will soon enter the Indian car market. Mini had earlier decided to delay the launch of its models in India but is now considering an earlier launch.BMW president Andreas Schaaf has said: “ We will decide on the launch of Mini in India in a year’s time. If it is a positive decision, the brand will be in India in 2-3 years.”
Story first published: Saturday, August 27, 2011, 11:45 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X