தடுமாறும் உலக பொருளாதாரம்: ஜெனரல் மோட்டார்ஸ் தலைவர் கவலை

GM cheif Dan Akerson
பிராங்பர்ட்: "அடு்த்த உலக பொருளாதார நெருக்கடியை சந்திக்கக்கூடிய அபாயம் உள்ளது," என ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைவர் டான் அகெர்சென் கவலை தெரிவித்துள்ளார்.

ஜெர்மனியிலிருந்து வெளிவரும் பிரபல வர்த்தக நாளிதழான டச்லேண்டுக்கு ஜெனரல் மோட்டார்ஸ் தலைவர் டான் அகிர்சென் சிறப்பு பேட்டி அளித்துள்ளார். அப்போது, அவர் உலக பொருளாதாரத்தில் நிலவும் ஸ்திரத்தன்மையற்ற போக்கு குறித்து மிகுந்த கவலை தெரிவித்தார்.

பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:

"அடுத்த பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரத்தில் காணப்படும் ஸ்திரத்தன்மையற்ற நிலையை வைத்து இதை கூறுகிறேன்.

கடந்த ஒரு வாரமாக சர்வதேச அளவில் பங்கு சந்தைகளில் ஏற்பட்டு வரும் வீழ்ச்சியின் மூலம் இதுதெளிவாகிறது. இதனால், அடுத்த உலக பொருளாதார நெருக்கடிக்கு வழிகோலும் ஆபத்து ஏற்பட்டுள்ளது," என்றார்.

கடந்த 2008ம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியில் ஜெனரல் மோட்டார்ஸ் கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆனால், இதைத்தொடர்ந்து வளர்ச்சிப்பாதைக்கு திரும்பியுள்ள அந்த நிறுவனம் விற்பனையில் தற்போது டொயோட்டோவை பின்னுக்குத் தள்ளி நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
General Motors' chairman Dan Akerson is worried at the chances of another economic recession, he said on Thursday in an interview with the Financial Times Deutscheland. "There is a danger of a new recession and I see it with concern," Akerson was quoted by the German-language daily as saying. Global equity markets have been extremely volatile over the past week owing to fears of a double dip recession, driven by the US and eurozone debt crises.
Story first published: Thursday, August 11, 2011, 18:09 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X