நேபாளத்தில் நானோ: விலை ரூ. 8 லட்சம்

Tata Nano
மும்பை: டாடா மோட்டர்ஸ் தனது படைப்பான நானோவை அன்டை நாடான நேபாளத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.

குறைந்த விலை என்ற அஸ்திரத்தை பயன்படுத்தி நானோ காரின் விற்பனையை பல மடங்கு அதிகரித்து வருகிறது டாடா மோட்டார்ஸ். முதலில் இலங்கைக்கு நானோவை ஏற்றுமதி செய்தது. தற்போது நோபாளத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தியாவில் ரூ. 1 லட்சத்திற்கு விற்பனையாகும் நானோ நேபாளத்தில் ரூ. 7.98 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது.

இது குறித்து டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சர்வதேச வர்த்தகப் பிரிவின் தலைவர் ஜானி ஊம்மன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

நேபாளத்தில் நானோ காரை அறிமுகப்படுத்துவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம். நானோவை வாங்குபவர்கள் திருப்தி அடையும் வகையில் அதன் செயல்பாடுகள் இருக்கும். மூன்று வகை நானோ காரும் நேபாளத்தில் கிடைக்கும் என்றார்.

நேபாள வீதிகளில் ஓடும் கார்களில் பெரும்பாலானவை டாடா நிறுவனக் கார்கள் தான். அங்கு டாடா நிறுவனம் தான் கார் விற்பனையில் முன்னோடியாக இருக்கிறது. அங்கு டாடா இன்டிகா, சுமோ, மான்சா, சபாரி, கிராண்டே, ஆரியா ஆகிய கார்கள் அதிக அளவில் விற்பனையாகின்றன.

இலங்கையில் நானோ ரூ. 9. 25 லட்சத்திற்கு விற்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆக, இந்தியாவில் மட்டும்தான் இது விலை மலிவு காராக வலம் வருகிறது. இந்தியாவைத் தாண்டினால் வி்லையையும் ஏற்றி எகிறடித்து வருகிறது டாடா.

Most Read Articles
English summary
Tata Motors has launched Nano, the world's cheapest car in Nepal. Though it costs just Rs. 1 lakh in India, Nano will be sold for Rs. 7.98 lakh in Nepal, i.e., thrice the price here.
Story first published: Monday, June 27, 2011, 16:45 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X