சென்னை ஆலையில் சன்னி உற்பத்தியை துவங்கியது நிசான்

ஜப்பானை சேர்ந்த நிசான் நிறுவனம், இந்திய சந்தையில் பெரிய திட்டங்களுடன் களமிறங்கியுள்ளது. இந்தியாவை தமக்கு முக்கிய வியாபார ஸ்தலமாக ஆக்கும் வகையில், சென்னை அருகே ஓரகடத்தில் ரினால்ட் நிறுவனத்துடன் இணைந்து ரூ.4,500 கோடி மதிப்பீட்டில் புதிய கார் ஆலையை கட்டியது.
கடந்த 15 மாதங்களுக்கு முன் உற்பத்தி துவங்கப்பட்ட இந்த ஆலையில் தற்போது மைக்ரா கார் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த 3ந் தேதி அறிமுகம் செய்யப்பட்ட சன்னி செடான் கார் உற்பத்தியையும் இந்த ஆலையில் துவங்கியுள்ளது நிசான்.
இந்த புதிய காருக்கான 85 சதவீத உதிரிபாகங்கள் இந்தியாவிலும், அதிலும் 40 சதவீத பாகங்கள் சென்னையிலுள்ள சப்ளையர்களிடமிருந்து நிசான் பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மீதமுள்ள முக்கிய உதிரிபாகங்கள் மட்டும் ஜப்பானிலுள்ள தனது ஆலையிலிருந்து நிசான் பெறுகிறது.
மிட்சைஸ் ரகத்தை சேர்ந்த சன்னி இந்திய வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை எளிதில் நிறைவேற்றும் என நிசான் நம்புகிறது. மேலும், அடுத்தடுத்து புதிய மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தவும் நிசான் திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








