மினிவேனை இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்ய நிசான் திட்டம்

Nissan MPV
சென்னை: இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட இருக்கும் என்வி-100 மினிவேன்களில் 20 சதவீதத்தை அண்டை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய நிசான் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

என்வி-100 என்ற எம்பிவி ரகத்தை சேர்ந்த மினிவேனை நிசான் அடுத்த ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்த இருக்கிறது.

டொயோட்டோ இன்னோவா உள்ளிட்ட கார்களுக்கு கடும் சந்தை போட்டியை கொடுக்கும் வகையில் வர இருக்கும் இந்த மினிவேன் அசோக் லேலண்ட் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் இந்தியாவில் தயாரிக்க நிசான் முடிவு செய்துள்ளது.

ஓசூரில் உள்ள அசோக் லேலண்ட் ஆலையில் இந்த மினிவேன் தயாரிக்கப்பட இருப்பதாகவும், நிசான் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், ஓசூர் ஆலையில் உற்பத்தி செய்யப்படும் என்வி-100 மினிவேன்களில் 20 சதவீதத்தை வங்கதேசம், இலங்கை, நேபாளம் உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய நிசான் முடிவு செய்துள்ளது.

ஸ்லைடர் கதவுகள், தாரள இடவசதியுடன் வர இருக்கும் இந்த மினிவேனில் சிஆர்டிஐ தொழில்நுட்பம் கொண்ட 1.5 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டு வரும் என்று தெரிகிறது.

இதன் ரகத்தை சேர்ந்த டொயோட்டோ இன்னோவா மற்றும் மஹிந்திரா சைலோ ஆகிய கார்களை ஒப்பிடும்போது இது அதிக மைலேஜ் கொடுக்கும் வகையில் இருக்கும்.

7 பேர் அமர்ந்து செல்லும் வசதிகொண்ட இந்த கார் குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்படலாம் என்பதால், அதிக வரவேற்பை பெறும் என்று ஆட்டோ வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

Most Read Articles
English summary
Nissan is much in news for its new MPV Nissan NV200 for a while. Recently it made an alliance with one of the best heavy duty truck manufacturers, Ashok Leyland for manufacturing the NV200 at the latter’s plant at Hosur, in Tamil Nadu. As of now, everything seemed to be focused for the Indian market but to our surprise Nissan is also concentrating on enough production, to export one fifth of the total to neighboring countries. With no clue which countries would be in the export list, Sri Lanka and Bangladesh and probably Nepal could be expected to get this brand new global MPV.
Story first published: Tuesday, June 19, 2012, 16:57 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X