புதிய கார் ஆலை: தமிழக அரசுடன் பியோஜியட் விரைவில் பேச்சுவார்த்தை

Peugeot
சென்னை: புதிய கார் தொழிற்சாலை அமைப்பது குறித்து தமிழக அரசு அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு பியோஜியட் கார் நிறுவனத்தின் அதிகாரிகள் விரைவில் தமிழகம் வருகை தர உள்ளனர்.

பிரான்சு நாட்டின் இரண்டாவது பெரிய கார் நிறுவனமான பியோஜியட் விரைவில் இந்திய சந்தையில் கால்பதிக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக, பிரம்மாண்ட கார் தொழிற்சாலையை கட்டவும் அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.

புதிய தொழிற்சாலையை அமைப்பது குறித்து அந்த நிறுவனம் தீவிரமாக பரிசீலித்து வருகிறது. தமிழகம், ஆந்திரா மற்றும் குஜராத் ஆகிய ஏதாவது ஒரு மாநிலத்தில் புதிய தொழிற்சாலையை கட்டுவது குறித்து அந்த நிறுவனம் பல முக்கிய ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், தமிழகத்தில் கார் தொழிற்சாலை அமைப்பது குறித்து தமிழக அரசு உயரதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த பியோஜியட்டின் உயரதிகாரிகள் குழு அடுத்த வாரம் சென்னை வர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய தொழிற்சாலைக்காக பியோஜியட் நிறுவனமும், அதன் சார்பு நிறுவனங்களும் ரூ.9,000 கோடி வரை முதலீடு செய்ய உள்ளன. இதன்மூலம், ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்புகளும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
French automobile company PSA Peugeot Citroen is entering the Indian automobile market for a second innings and it has been reported that the company will have its first plant in South as reports state that a senior delegation from PSA Peugeot Citroen is expected to meet the Tamil Nadu government next week.
Story first published: Tuesday, June 28, 2011, 15:44 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X