ரூ.4,000 கோடியில் குஜராத்தில் கார் ஆலை: பியோஜியட் முடிவு

Peugeot Hybrid
அகமதாபாத்: ஒரு வழியாக குஜராத்தில் கார் ஆலை அமைக்க பியோஜியட்-சிட்ரோவன் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

ஜெர்மனியை சேர்ந்த பியோஜியட்-சிட்ரோவன் நிறுவனம் பிரிமியர் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் கார் உற்பத்தி செய்து வந்தது.

இந்த நிலையில், பிரிமியர் உறவை முறித்துக்கொண்டு சென்றுவிட்ட பியோஜியட் தற்போது மீண்டும் இந்திய சந்தையில் கால் பதிக்க முடிவு செய்துள்ளது.

விரைவில் தனது பிரிமியம் ரக கார்களை இந்தியாவில் அறிமுகப்படு்த்த அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இதற்காக, ரூ.4,000 கோடியில் இந்தியாவில் புதிய கார் ஆலை அமைக்கப்போவதாகவும் அறிவித்ததது.

தமிழகம், ஆந்திரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் ஏதேனும் ஒன்றில் புதிய ஆலையை அமைக்க அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக, சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுடன் பியோஜியட் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடன் கூட சமீபத்தில் அந்த நிறுவனத்தின் அதிகாரிகள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

தமிழகத்தில் பியோஜியட் கார் ஆலை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இறுதியாக, குஜராத்தில் புதிய கார் ஆலையை அமைக்க முடிவு செய்துள்ளது.

இந்த தகவலை குஜராத் மாநில அரசு அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார். அடுத்த மூன்று நாட்களில் பியோஜியட் இதுதொடர்பாக முறைப்படி அறிவிப்பு வெளியிடும் என்றும் அவர் தெரிவித்தார்.

நானோ கார் தொழிற்சாலை அமைந்துள்ள சன்ந்த் தொழிற்பேட்டையிலேயே பியோஜியட் ஆலையும் அமைய இருக்கிறது.

புதிய ஆலைக்கு 1,000 ஏக்கர் நிலத்தை ஒதுக்குவதாக பியோஜியட் நிறுவனத்திடம் குஜராத் அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, நாளை குஜராத் அரசுக்கும், பியோஜியட் நிறுவனத்துக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று தெரிகிறது.

Most Read Articles
English summary
French automaker PSA Peugeot Citroen will set up 4,000-crore facility at Sanand in Gujarat, an emerging auto hub in the country after Gurgaon, Pune and Chennai. A senior official in the Chief Minister's Office said the multinational zeroed in on Gujarat after exploring locations in Tamil Nadu and Andhra Pradesh. An announcement is likely in three days, the official said.
Story first published: Wednesday, August 31, 2011, 14:53 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X