நானோ டாக்சியால் பாதிப்பு: இலங்கையில் ஆட்டோ டிரைவர்கள் போராட்டம்

Tata Nano Taxi
கொழும்பு: நானோ காருக்கு டாக்சி பெர்மிட் வழங்குவதை கண்டித்து, இலங்கை தலைநகர் கொழும்புவில் ஆட்டோ டிரைவர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதனால், அங்கு ஒரு மணிநேரத்திற்குமேல் போக்குவரத்து ஸ்தம்பித்தெது.

உலகின் மிகக்குறைந்த விலைகொண்ட கார் என்ற பெருமையுடன் வலம் வரும், நானோ காரை டாடா மோட்டார்ஸ் சமீபத்தில் இலங்கைக்கு ஏற்றுமதி செய்ய துவங்கியது. அங்கு நானோவுக்கு பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.

மேலும், கொழும்புவை சேர்ந்த டிராவல்ஸ் நிறுவனம் ஒன்று நானோ கார்களுக்கு டாக்சி பெர்மிட் பெற்று இயக்கி வருகிறது.. சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த கொழும்பு நகரில், மற்ற வாடகை கார்களை காட்டிலும் நானோ கார்கள் மிகக்குறைந்த வாடகைக்கு விடப்படுவதால் வாடிக்கையாளர்களிடம் அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.

நானோவுக்கு வசூலிக்கப்படும் வாடகை கட்டணம், அங்கு ஓடும் ஆட்டோக்களில் வசூலிக்கப்படும் கட்டணத்திற்கு சமமாக இருப்பதால், ஆட்டோ ஓட்டுனர்களுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, நானோ கார்களுக்கு இனி புதிதாக டாக்தி பெர்மிட் வழங்கக்கூடாது என்பதை வலியுறுத்த கொழும்பு நகரில் நடுரோட்டில் ஆட்டோக்களை நிறுத்தி ஆட்டோ டிரைவர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால், கொழும்பு நகரில் முக்கிய சாலைகளில் ஒரு மணிநேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

நானோ டாக்சிகளை இயக்கி வரும் டிராவல்ஸ் நிறுவனத்தில் தற்போது 45 நானோ டாக்சி கார்கள் உள்ளன. வரும் டிசம்பர் மாதத்திற்குள் 200 நானோ டாக்சிகளை இயக்கப்போவதாக அந்த நிறுவனம் ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
Taxi drivers in Sri Lanka's capital held up traffic, demanding the government should stop allowing anymore use Tata Nanos on the streets that offer stiff competition to the ubiquitous three-wheelers.
Story first published: Thursday, June 23, 2011, 10:06 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X