ஸ்விப்ட் வரவால் தமிழகத்தில் விற்பனை 40% அதிகரிக்கும்: மாருதி கணிப்பு

New Swift
சென்னை: புதிய ஸ்விப்ட் காரை வைத்து மிகப்பெரிய மனக்கோட்டை கட்டியுள்ளது மாருதி. கடந்த சில மாதங்களாக விற்பனை படுத்துவிட்டபோதிலும், புக்கிங்கில் ஸ்விப்ட் இமாலய எண்ணிக்கையை தொட்டுள்ளதால், அதிக எதிர்பார்ப்பு மற்றும் நம்பிக்கையை வரவழைத்துக்கொண்டு ஸ்விப்ட் விற்பனையை கவனிக்க துவங்கியுள்ளது மாருதி.

மேலும், ஸ்விப்ட் காருக்கு இந்தியாவிலேயே தமிழகம் மிக முக்கியமான மார்க்கெட்டாக இருக்கிறது. மொத்தத்தில் மாதத்திற்கு 12,000 ஸ்விப்ட் கார்கள் விற்பனையாகி வந்தன. இதில், 1,000 தமிழகத்தில் விற்பனையாகி வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், பழைய ஸ்விப்ட்டைவிட புதிய ஸ்விப்ட்டுக்கு வாடிக்கையாளர் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால், தமிழகத்தில் புதிய ஸ்விப்ட் வரவால் விற்பனை கணிசமாக உயரும் என மாருதி நிறுவனம் கருதுகிறது.

கடந்த 18ந் தேதி புதிய ஸ்விப்ட் கார் சென்னையில் அறிமுகம் செய்யப்பட்டது. விழாவில் கலந்து கொண்டு காரை அறிமுகப்படு்ததிய மாருதி தென் மண்டல பொது மேலாளர் பங்கஜ் பிரபாரகர் கூறியதாவது:

"தமிழக கார் மார்க்கெட்டில் ஸ்விப்ட் முக்கிய இடத்தை பிடித்து வைத்திருக்கிறது. மேலும், அதிக மைலேஜ், புது்ப்பொலிவுடன் வந்துள்ள புதிய ஸ்விப்ட் வாடிக்கையாளர் மத்தியில் பெரிய வரவேற்பை பெறும். மேலும், புதிய ஸ்விப்ட் வரவால் மொத்த கார் விற்பனை 40 சதவீதம் அளவுக்கு உயரும் என்று எதிர்பார்க்கிறோம்," என்றார்.

பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய ஸ்விப்ட் கார் சென்னையில் ரூ.4.36 லட்சம் முதல் ரூ.5.26 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கும் என்று மாருதி தெரிவித்துள்ளது.

Most Read Articles
English summary
Maruti Suzuki expects a 40 per cent jump in sales in Tamil Nadu of its new Swift variants, over the previous model. The new Swift, in both the petrol and diesel versions, is touted to be longer and wider than its predecessor. It also claims to offer more power and mileage. The car was launched in the city on Thursday, at a starting ex-showroom price of Rs 4.39 lakh (petrol) and Rs 5.26 lakh (diesel).
Story first published: Saturday, August 20, 2011, 12:10 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X