24 வருஷமா இருந்தாலும் காருக்கு டிமாண்ட் கொஞ்சமும் குறையல! இந்த 7 காரில் ஒன்றை வாங்குறதுதான் புத்திச்சாலித்தனம்
மஹிந்திரா (Mahindra), இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி & விற்பனை நிறுவனம். குறிப்பாக, கடந்த சில வருடங்களில் மஹிந்திரா கார்களின் விற்பனை பெரிய அளவில் வளர்ச்சி கண்டுள்ளது. எந்த அளவிற்கு என்றால், சில மாதங்களில் இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்த நிறுவனங்களின் பட்டியலில் மாருதி சுஸுகி (Maruti Suzuki)-க்கு அடுத்து 2வது இடத்தை பிடித்து மஹிந்திரா ஆச்சிரியப்படுத்தி உள்ளது.
ஆனால், சில வருடங்களுக்கு முன்பு வரையில் கார்கள் விற்பனையில் பெரும்பாலும் 4வது இடத்தையே மஹிந்திரா பிடித்துவந்தது. இதன் மூலமாக, கடந்த 2026 பிப்ரவரி மாதத்தில் மொத்தம் 60 ஆயிரத்து 18 கார்களை மஹிந்திரா விற்பனை செய்துள்ளது. அதுவே, கடந்த 2025ஆம் ஆண்டில் இதே பிப்ரவரி மாதத்தில் 50 ஆயிரத்து 420 கார்களை மட்டுமே மஹிந்திரா விற்பனை செய்து இருந்தது. இந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனையான டாப்-7 மஹிந்திரா கார் மாடல்களை பற்றி இங்கே இந்த தொகுப்பில் காணலாம்.

மஹிந்திரா ஸ்கார்பியோ (Scorpio): மஹிந்திராவின் நீண்ட கால நம்பிக்கைக்குரிய கார் மாடலாக ஸ்கார்பியோ விளங்குகிறது. தற்சமயம் ஸ்கார்பியோ-என் மற்றும் ஸ்கார்பியோ கிளாசிக் என இரு விதமான ஸ்கார்பியோ கார்கள் விற்பனை செய்யப்படும் நிலையில், கடந்த பிப்ரவரி மாதத்தில் 14,665 ஸ்கார்பியோ கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதுவே, 2025 பிப்ரவரியில் 13,618 ஸ்கார்பியோ கார்களை மட்டுமே மஹிந்திரா விற்பனை செய்திருந்தது.
மஹிந்திரா தார் (Thar): இந்தியாவில் அதிக பேரால் வாங்கப்படும் ஆஃப்-ரோடு எஸ்யூவி வாகனமாக விளங்கும் தார் ஆனது 3 கதவுகள் கொண்ட தார் மற்றும் 5 கதவுகள் கொண்ட தார் ராக்ஸ் என இரு விதமான வெர்சன்களில் விற்பனை செய்யப்படுகிறது. இவை இரண்டும் மொத்தமாக கடந்த பிப்ரவரி மாதத்தில் 11 ஆயிரத்து 47 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 9,248 தார் வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்த 2025 பிப்ரவரியை விட 1,799 யூனிட்கள் அதிகமாகும்.

மஹிந்திரா பொலேரோ (Bolero): ஸ்கார்பியோவை போன்று மஹிந்திராவின் நீண்ட கால நம்பிக்கைக்குரிய கார் மாடலாக பொலேரோ விளங்குகிறது. 2025 பிப்ரவரியில் 8,690 பொலேரோ கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில், கடந்த பிப்ரவரியில் 13.50% அதிகமாக 9,863 பொலேரோ கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
மஹிந்திரா எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ (XUV 7XO): மஹிந்திராவின் சமீப கால சிறந்த விற்பனை கார் மாடலாக மாறி இருக்கும் எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ ஆனது மிட்-சைஸ் எஸ்யூவி (Mid-size SUV) ரக கார் ஆகும். இது கடந்த பிப்ரவரி மாதத்தில் 9,112 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதுவே, 2025 பிப்ரவரியில் விற்பனை செய்யப்பட்டு இருந்த எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ கார்களின் எண்ணிக்கை 7,468 யூனிட்கள் ஆகும்.
மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ (XUV 3XO): எலெக்ட்ரிக் காராகவும் விற்பனை செய்யப்படும் மஹிந்திராவின் இந்த சப்-4 மீட்டர் எஸ்யூவி கார் கடந்த பிப்ரவரி மாதத்தில் 8,637 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. 2025 பிப்ரவரியில் விற்பனை செய்யப்பட்ட 7,861 எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ கார்கள் உடன் ஒப்பிடுகையில் இது 9.87%, அதாவது 776 யூனிட்கள் அதிகமாகும்.
| Mahindra Sales | Feb-26 | Feb-25 | Growth % YoY |
| Scorpio / N | 14,665 | 13,618 | 7.69% |
| Thar / ROXX | 11,047 | 9,248 | 19.45% |
| Bolero | 9,863 | 8,690 | 13.50% |
| XUV 7XO | 9,112 | 7,468 | 22.01% |
| XUV 3XO / EV | 8,637 | 7,861 | 9.87% |
| XEV 9S | 3,539 | 0 | - |
| XEV 9e | 1,889 | 2,205 | -14.33% |
| BE 6 | 1,104 | 991 | 11.40% |
| XUV 400 | 162 | 322 | -49.69% |
| Marazzo | 0 | 17 | -100.00% |
| Total | 60,018 | 50,420 | 19.04% |
மஹிந்திரா எக்ஸ்இவி 9எஸ் (XEV 9s): மஹிந்திரா நிறுவனத்தில் இருந்து சமீப மாதங்களில் பெரிதும் வெற்றி பெற்றுள்ள எலெக்ட்ரிக் கார் (Electric Car) இதுவாகும். கடந்த 2025 நவம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த எலெக்ட்ரிக் கார் கடந்த பிப்ரவரி மாதத்தில் 3,539 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதுவே, 2026 ஜனவரி மாதத்தில் வெறும் 612 எக்ஸ்இவி 9எஸ் எலெக்ட்ரிக் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன.
மஹிந்திரா எக்ஸ்இவி 9இ (XEV 9e): மேலே கண்ட எக்ஸ்இவி 9இ எலெக்ட்ரிக் காரின் விலைமிக்க பிரீமியம் வெர்சனாக விளங்கும் எக்ஸ்இவி 9இ எலெக்ட்ரிக் கார் கடந்த பிப்ரவரி மாதத்தில் 1,889 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இத்தனைக்கும் இது மஹிந்திராவின் விலையுயர்ந்த எலெக்ட்ரிக் கார் ஆகும். இருப்பினும், 2025 பிப்ரவரியில் 2,205 எக்ஸ்இவி 9இ எலெக்ட்ரிக் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: விற்பனை அதிகரித்து இருப்பதற்கு முக்கிய காரணம், மஹிந்திராவில் இருந்து சமீப காலத்தில் அறிமுகம் செய்யப்பட்ட புது, புது கார்கள் ஆகும். முக்கியமாக, புதிய மஹிந்திரா எலெக்ட்ரிக் கார்களுக்கு கிடைத்த அதீத வரவேற்பு ஆனது நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கையை அதிகரித்துள்ளது. இதன் மூலமாக, கடந்த பிப்ரவரி மாதத்தில் இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்த நிறுவனமாக 3வது இடத்தை மஹிந்திரா பிடித்துள்ளது.


Click it and Unblock the Notifications








