ஹூண்டாய் ஷோரூம்கள் காத்து வாங்கும் காலம் ரொம்ப நாள் இல்ல! வருபவர்களும் இந்த 7 கார்களில் ஒன்றைதான் வாங்குறாங்க!
ஹூண்டாய் (Hyundai) நிறுவனத்தின் விற்பனை மாதத்திற்கு மாதம் குறைந்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக, கடந்த 2026 பிப்ரவரி மாத விற்பனையில் டாடா மோட்டார்ஸ் (Tata Motors) மற்றும் மஹிந்திரா (Mahindra) நிறுவனங்கள் விற்பனையில் ஹூண்டாயை முந்தி உள்ளன. இது கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்துக் கொண்டிருக்கிறது என்பதுதான் இதில் ஆச்சிரியமான விஷயமே.
உண்மையை சொல்ல போனால், ஹூண்டாய் கார்களின் விற்பனை பெரியதாக குறையவில்லை. மாறாக டாடா மற்றும் மஹிந்திரா கார்களின் விற்பனை வெகுவாக அதிகரித்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். கடந்த பிப்ரவரி மாதத்தில் மொத்தம் 52 ஆயிரத்து 407 கார்களை ஹூண்டாய் விற்பனை செய்துள்ளது. இதில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட முதல் ஏழு ஹூண்டாய் கார் மாடல்களை அவற்றின் கடந்த மாத விற்பனை எண்ணிக்கைகள் உடன் பார்ப்போம்.

ஹூண்டாய் கிரெட்டா (Creta): ஹூண்டாயின் பிரபலமான காம்பாக்ட் எஸ்யூவி ரக காரான கிரெட்டா கடந்த பிப்ரவரி மாதத்தில் 17 ஆயிரத்து 938 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதில், கிரெட்டா இவி என்கிற அதன் எலெக்ட்ரிக் வெர்சனின் விற்பனை அடங்கும். இந்த விற்பனை எண்ணிக்கை மூலமாக கடந்த மாதத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட கார்கள் லிஸ்ட்டில் 3வது இடத்தை பிடித்துள்ள கிரெட்டா, 2025 பிப்ரவரி மாதத்தில் 16,317 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தது.
ஹூண்டாய் வென்யூ (Venue): கிரெட்டாவிற்கு அடுத்து மக்கள் மத்தியில் பிரபலமான ஹூண்டாய் காராக விளங்கும் வென்யூ, கிரெட்டாவை விட அளவில் சிறியது ஆகும். இருப்பினும், பட்ஜெட் விலையில் கார் வாங்க விரும்புபவர்களுக்கு ஏற்ற காராக விளங்கும் வென்யூ கடந்த மாதத்தில் 10,494 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. 2025 பிப்ரவரியிலும் கிட்டத்தட்ட இதற்கு இணையாக 10,125 வென்யூ கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

ஹூண்டாய் அவ்ரா (Aura): ஹூண்டாய் நிறுவனத்தில் இருந்து விற்பனை செய்யப்படும் அவ்ரா ஆனது இந்தியாவில் மாருதி சுஸுகி டிசையருக்கு அடுத்து 2வது இடத்தை பிடித்து அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் செடான் காராக விளங்குகிறது. கடந்த மாதத்தில் 6,733 யூனிட்கள் விற்பனை உடன் இந்த லிஸ்ட்டில் 3வது இடத்தை பிடித்துள்ளது. அதுவே, 2025 பிப்ரவரியில் 4,787 அவ்ரா கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன.
ஹூண்டாய் ஐ20 (i20): ஹூண்டாய் நிறுவனத்தின் பிரீமியம் தரத்திலான ஹேட்ச்பேக் காரான இது கடந்த 2026 பிப்ரவரி மாதத்தில் 5,852 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆனால், 2025 பிப்ரவரியில் வெறும் 3,627 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தது. இந்த வகையில் பார்க்கும்போது கடந்த பிப்ரவரி மாதத்தில் 2,225 ஐ20 கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. விற்பனையில் இந்த காருக்கு மாருதி சுஸுகியின் பலேனோ (Baleno) மற்றும் டாடா அல்ட்ராஸ் (Tata Altroz) கார்கள் போட்டியாக உள்ளன.
ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் (Grand i10 NIOS): ஹூண்டாய் நிறுவனத்தில் இருந்து குறைவான விலையில் விற்பனை செய்யப்படும் கார்களுள் ஒன்று, கிராண்ட் ஐ10 நியோஸ் ஆகும். கடந்த 2026 பிப்ரவரி மாதத்தில் 5,589 யூனிட் கிராண்ட் ஐ10 நியோஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதுவே, 2025 பிப்ரவரியில் இந்த கார் 4,940 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தது.
ஹூண்டாய் எக்ஸ்டர் (Exter): ஹூண்டாய் நிறுவனத்தின் அளவில் சிறியதான காரான எக்ஸ்டர் கடந்த மாதத்தில் 4,200 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆனால், 2025 பிப்ரவரியில் 5,361 எக்ஸ்டர் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில் பார்க்கும்போது, கடந்த ஆண்டு பிப்ரவரியை காட்டிலும் 1,161 யூனிட்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ள எக்ஸ்டர் விற்பனையில் டாடா பன்ச் காருக்கு போட்டியாக விற்பனை செய்யப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவைதான் தற்போதைக்கு ஹூண்டாய் நிறுவனத்தில் இருந்து அதிகம் விற்பனையாகும் டாப்-10 ஹூண்டாய் கார்கள் ஆகும். இந்த தொகுப்பின்படி பார்க்கும்போது, இவற்றின் விற்பனை வழக்கத்தை காட்டிலும் பெரிய அளவில் குறையவில்லை. மாறாக, மஹிந்திரா, டாடா கார்களை அதிகம் பேர் வாங்க ஆரம்பித்துள்ளனர் என்றுதான் சொல்ல வேண்டும்.


Click it and Unblock the Notifications








