விற்பனை மந்தம்: நானோவு்க்கு ரூ.20,000 வரை தள்ளுபடி

Tata Nano
மும்பை: விற்பனையை அதிகரிக்கும் வகையில் நானோ காருக்கு ரூ.15,000 முதல் ரூ.20,000 வரை டாடா மோட்டார்ஸ் சலுகை வழங்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டாடா குழுமத்தலைவர் ரத்தன் டாடாவின் கனவு திட்டத்தில் உருவான உலகின் மிகக்குறைந்த விலை கொண்ட நானோ கார் கடந்த 2009ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.

அறிமுகம் செய்யப்பட்டது முதலே நானோ பல்வேறு இடர்பாடுகளை சந்தித்து வருகிறது. இதனால், நானோ காரின் விற்பனை ஒரு மாதத்தில் இருப்பது போல் மறுமாதம் இருப்பதில்லை.

கடந்த மாதமும் நானோ காரின் விற்பனை 64 சதவீதம் குறைந்தது. நானோ காரின் விற்பனையை உயர்த்த டாடா பல்வேறு உபாயங்களை கையாண்டு வருகிறது.

இந்த நிலையில், நானோ விற்பனையை அதிகரிக்க தற்போது நானோ காரின் மாடல்களுக்கு தக்கவாறு ரூ.15,000 முதல் ரூ.20,000 வரை டாடா சலுகைகள் வழங்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விரைவில் பண்டிகை காலம் துவங்க இருப்பதால் பல்வேறு கார் நிறுவனங்களும் சலுகைகளை அறிவித்து வருகின்றன. புதிய கார் அறிமுகங்களும் வரிசை கட்டி நிற்கின்றன.

இதனால், நானோவின் விற்பனை பாதிக்கப்படாமல் இருக்கவும், மேலும், விற்பனையை உயர்த்தவும் நானோ காருக்கு டாடா மோட்டார்ஸ் சலுகைகளை வழங்க இருப்பதாக தெரிகிறது.

நானோ ஸ்டான்டர்டு வெர்ஷனுக்கு ரூ.15,000 வரையிலும், நானோ சிஎக்ஸ் மற்றும் எல்எக்ஸ் ஹைவேரியண்ட் மாடல்களுக்கு ரூ.20,000 வரையிலும் சலுகைகள் வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

சலுகை விலை விபரம்:

முந்தைய விலை சலுகை விலை
நானோ ஸ்டாண்டர்டு வேரியண்ட் ரூ.1.74 லட்சம் ரூ.1.59 லட்சம்

நானோ சிஎக்ஸ் வேரியண்ட்
ரூ.2.06 லட்சம் ரூ.1.89 லட்சம்
நானோ எல்எக்ஸ் வேரியண்ட் ரூ.2.36 லட்சம் ரூ.2.16 லட்சம்
Most Read Articles
English summary
Tata Motors is going all out to increase the sales of the Nano. The Indian carmaker is reportedly offering discounts of up to Rs.20,000. This is a huge discount considering the price of the Nano. We had reported earlier that the ssales of the Tata nano had dropped by 64 per cent in July. Tata Motors is deperate to boost its small car's sales.The Tata Nano small car has been the dream project of Tata Group Chairman Ratan Tata. The car was launched with a starting price of Rs 1 lakh and the price soon shot up. The high end LX version now costs Rs.2.36 lakhs, which is at least double than the initial price.
Story first published: Wednesday, August 10, 2011, 15:27 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X