இந்த ஆண்டு 2,000 பேரை பணியமர்த்தும் டொயோட்டோ

Toyota Logo
மும்பை: இந்த ஆண்டு இந்தியாவில் புதிதாக 2,000 பேரை பணியமர்த்த போவதாக டொயோட்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜப்பானை சேர்ந்த டொயோட்டோ நிறுவனம், இந்தியாவின் கிர்லோஸ்கர் நிறுவனத்துடன் இணைந்து கார் உற்பத்தி செய்து வருகிறது.

இந்த நிலையில், மற்ற முன்னணி நிறுவனங்களுக்கு கடும் போட்டி கொடுக்கும் வகையில் புதிய மாடல் கார்களை அந்த நிறுவனம் அறிமுகப்படுத்தி வருகிறது.

இதற்கு தக்கவாறு உற்பத்தியை அதிகரிக்க வேண்டியுள்ளதால், புதிதாக 2,000 பேரை பணிக்கு அமர்த்த அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து டொயோட்டோ கிர்லோஸ்கர் மேலாண் இயக்குனர் ஹிரோஷி நாககவா கூறியதாவது:

" அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சந்தைகளைவிட இந்திய சந்தையை முக்கியமானதாக கருதுகிறோம். இந்திய சந்தையில் தற்போது குறைந்த விகிதத்தை கொண்டுள்ளோம்.

ஆனால், எட்டியோஸ் மற்றும் லிவா கார்களின் மூலம் அடுத்த சில ஆண்டுகளில் எங்களது விற்பனை வளர்ச்சி கணிசமாக உயரும்.

மேலும், இந்த கார்களுக்கு வாடிக்கையாளர் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளதால், உற்பத்தியை அதிகரிக்க வேண்டி உள்ளது.

இதற்கு ஏதுவாக மனிதவள மேம்பாட்டை அதிகரிக்க முடிவு செய்துள்ளோம். இதன்படி, இந்த ஆண்டு புதிதாக 2,000 பேரை பணிக்கு அமர்த்த திட்டமிட்டுள்ளோம்," என்றார்

Most Read Articles
English summary
Toyota will hire 2,000 people in India this year as it revamps up to bolster market share by launching small cars etios and etios liva.
Story first published: Thursday, June 30, 2011, 13:03 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X