ஆலை விரிவாக்கப்பணிகளுக்கு ரூ.1,650 கோடி முதலீடு: டொயோட்டோ

Toyota
பெங்களூர்: உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் பெங்களூரில் உள்ள ஆலையை விரிவாக்கம் செய்வதற்கு ரூ.1,650 கோடி வரை முதலீடு செய்ய இருப்பதாக டொயோட்டோ அறிவித்துள்ளது.

ஜப்பானை சேர்ந்த டொயோட்டோ கார்ப்பரேஷன் இந்தியாவின் கிர்லோஸ்கர் நிறுவனத்துடன் இணைந்து பெங்களூர் அருகே தொழிற்சாலை அமைத்து கார் உற்பத்தி செய்து வருகிறது.

விலை உயர்ந்த ரக கார்களை மட்டும் தயாரித்து வந்த இந்த நிறுவனம் இந்திய மக்களின் தேவையை உணர்ந்துகொண்டு கடந்த ஆண்டு டிசம்பரில் எட்டியோஸ் செடான் காரையும், கடந்த மாதம் லிவா ஹேட்ச்பேக் காரையும் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்தது.

எட்டியோஸ் மற்றும் லிவா கார்களுக்கு வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பு இருப்பதால், எதிர்கால மார்க்கெட்டை கருதி உற்பத்தி திறனை அதிகரிக்க டொயோட்டோ முடிவு செய்துள்ளது.

ஆண்டுக்கு 1.50 லட்சம் கார்கள் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட பெங்களூர் ஆலை அடுத்த ஆண்டுக்குள் ஆண்டுக்கு 2.10 லட்சம் கார்களை உற்பத்தி செய்யும் வகையில் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது.

மேலும், வரும் 2013ம் ஆண்டுக்குள் ஆண்டுக்கு 3.10 லட்சம் கார்களை உற்பத்தி செய்யும் வகையில் இந்த விரிவாக்கப்பணிகளை அந்த நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

இதற்காக, ரூ.1,650 கோடி வரை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக டொயோட்டோ தெரிவித்துள்ளது.

Most Read Articles
English summary
Toyota has decided to increase their investment in India by pumping in Rs 1650 Crore which will be used to induce more capacity into their manufacturing plants. Toyota aims to increase production capacity by one lakh units by 2013. This also includes an increase in localization of components. Toyota India has recently introduced two new cars in the market which cater to the budget buyer. The Etios and the Etios Liva are set to bring in more volumes for the company and hence the automakers decision to increase capacity does not come as a surprise.
Story first published: Monday, August 1, 2011, 16:17 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X