ரூ.3.99 லட்சம் விலையில் லிவா ஹேட்ச்பேக் கார்: டொயோட்டோ அறிமுகம்

Etios Liva
டெல்லி: ரூ. 3.99 லட்சம் என்ற நம்ப முடியாத ஆரம்ப விலையில் தனது முதல் ஹேட்ச்பேக் காரான லிவாவை டொயோட்டோ நிறுவனம் நேற்று இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

இதனால், சிறிய ரக ஹேட்ச்பேக் கார் சந்தையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், லிவாவுக்காக காத்திருந்த வாடிக்கையாளர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் லிவாவை புக்கிங் செய்ய தயாராகிவிட்டனர்.

சி செக்மென்ட் கார் ரகத்தை சேர்ந்த லிவாவின் ஹெட்ரூம், லெக்ரூம் ஆகிய இடவசதிகள் அருமையாக உள்ளன. தலையை இடிக்காத வகையிலான கூரையும், கால்களை ஆரஅமர நீட்டுவதற்கான வசதியாக லெக்ரூமும் இருக்கும் வகையில் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பொதுவாக கார் வாங்க நினைக்கும் வாடிக்கையாளர்கள் முதலில் உள்பக்க இடவசதியைத்தான் அதிகம் எதிர்பார்க்கின்றனர். எனவே, இடவசதியில் மிகுந்த கவனம் செலுத்தி லிவாவை உருவாக்கியுள்ளது டொயோட்டோ.

பின்பக்க இருக்கையை மடக்கி விரிக்கும் வசதியும் உள்ளது. மேலும், வெளிப்புற வடிவமைப்பும் ஏரோடைனமிக் ஸ்டைலுடன் சூப்பராக இருக்கிறது.

ஆக்ஸ் கொண்ட ஆடியோ சிஸ்டம், ஸ்போர்ட்டியான ஸ்டீயரிங் வீல் உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் இதில் பொருத்தியுள்ளது டொயோட்டோ.

ஆக மொத்தம் இந்திய வாடிக்கையாளர்கள் கொடுக்கும் பணத்துக்கு மனநிறைவான காரை கொடுக்க வேண்டும் என்ற டொயோட்டோவின் அக்கறை காரின் ஒவ்வொரு அம்சங்களையும் பார்க்கும்போதே புரிகிறது.

ரூ. 3.99 லட்சம் முதல் ரூ.5.99 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் லிவா சந்தைக்கு வந்துள்ளது.

Most Read Articles

English summary
Toyota has launched the petrol variant of its much anticipated small car Liva in India today,Ex showroom priced between Rs 3.99 lakh and Rs 5.99 lakh.
Story first published: Tuesday, June 28, 2011, 9:53 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X