சுனாமியால் கார் விற்பனையில் நம்பர் ஒன் இடத்தை இழந்த டொயோட்டோ

Toyota Corolla Altis
டெட்ராய்டு: கார் விற்பனையில் உலகின் நம்பர் ஒன் இடத்தை டொயோட்டோ இழந்து இரண்டாமிடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் மீண்டும் நம்பர் ஒன் இடத்தை பிடித்து சாதித்துள்ளது.

நடப்பு ஆண்டில் முதல் ஆறுமாதங்களில் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் சர்வதேச அளவில் 45 லட்சம் கார்களை விற்பனை செய்துள்ளது.

ஆனால், நீண்ட காலமாக சர்வதேச அளவில் கார் விற்பனையில் முதலிடத்தில் இருந்த டொயோட்டோ இதே காலகட்டத்தில் 37.10 லட்சம் கார்களை விற்பனை செய்தது.

இதனால், ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்திடம் முதலிடத்தை பறிகொடுத்து இரண்டாமிடத்திற்கு தள்ளப்பட்டுவிட்டது.

இதேபோன்று, ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார் விற்பனை 8.9 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. அதேவேளை, டொயோட்டோவின் கார் விற்பனை 23 சதவீதம் சரிவு கண்டுள்ளது.

ஜப்பானில் கடந்த மார்ச் மாதம் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் கார் உற்பத்தி பாதிக்கப்பட்டதால், டொயோட்டோ நம்பர் ஒன் இடத்திலிருந்து பின்னுக்கு தள்ளப்பட்டதற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

இதைவிட, டொயோட்டோவுக்கு அதிர்ச்சி தரக்கூடிய செய்தி ஒன்றும் வெளியாகியுள்ளது. நடப்பு ஆண்டு முடிவில் டொயோட்டோ மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுவிடும் என்றும், வோக்ஸ்வேகன் இரண்டாவது இடத்துக்கு முன்னேறும் வாய்ப்பு அதிகம் இருப்பதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், இந்திய மார்க்கெட்டில் எட்டியோஸ் மற்றும் லிவா கார்களின் அறிமுகத்தால் டொயோட்டோவின் விற்பனை நல்ல வளர்ச்சி கண்டு வருகிறது.

Most Read Articles
English summary
US based leading car maker General Motors has snatched the top spot in the global auto market from Japanese Toyota Motors, as per a recent report from Detroit News. The report claims that while General Motors sold a total of 4.5 million cars in the first six months of this calendar year, Japanese auto giant Toyota only managed to sell 3.71 million vehicles during this period. General Motors registered 8.9 percent surge in its year to date sales figures. On the other hand, Toyota Motors registered a sharp decline of 23% in the same period. The sales of Toyota were majorly affected by the massive earth quake and Tsunami in March 2011, disrupting Toyota’s production drastically in its domestic market.
Story first published: Monday, August 8, 2011, 11:32 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X