ஜப்பானில் 4,000 பேரை வேலைக்கு அமர்த்த டொயோட்டோ திட்டம்

கடந்த மார்ச் மாதம் ஜப்பானில் ஏற்பட்ட இயற்கை பேரழிவுகளால், அங்குள்ள பல முன்னணி நிறுவனங்களில் கார் தொழிற்சாலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டது.
கார் உற்பத்தியில் உலக அளவில் முதலிடத்தில் உள்ள டொயோட்டோ நிறுவனத்தின் தொழிற்சாலைகளும், நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் சேதமடைந்தன.
இதனால், அந்த நிறுவனத்தின் தொழிற்சாலைகளில் கார் உற்பத்தி மற்றும் கார் தயாரிக்க தேவையான உதிரிபாகங்கள் உற்பத்தியும் அடியோடு முடங்கின.
இந்த நிலையில், இயற்கை சீற்றங்களால் ஏற்பட்ட உற்பத்தி இழப்பை சரிகட்டும் விதமாக, ஜப்பானில் புதிதாக 4,000 தொழிலாளர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








