டொயோட்டோ எட்டியோஸ் டீசல் காருக்கு டீலர்களில் புக்கிங்?

Toyota-Etios
பெங்களூர்: எட்டியோஸ் மற்றும் லிவா டீசல் கார்களுக்கான முன்பதிவை சத்தமில்லாமல் டொயோட்டோ துவங்கியுள்ளதாக ஆட்டோ வட்டாரங்கள் பரபரக்கின்றன.

இந்திய மார்க்கெட்டில் வெற்றிகரமான மாடல்களாக குறைந்த காலத்தில் பதிவு செய்துகொண்டுள்ள டொயோட்டோவின் எட்டியோஸ் மற்றும் லிவா கார்கள் பெட்ரோல் மாடலில் மட்டுமே கிடைக்கின்றன.

இந்த நிலையில், பெட்ரோல் விலை உயர்வால் மார்க்கெட்டில் டீசல் கார்களுக்கான மவுசு எக்கச்சக்கமாக கூடியுள்ளது. இதையடுத்து, இரண்டு கார்களின் டீசல் மாடலை விரைவில் அறிமுகப்படுத்த டொயோட்டோ திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அனேகமாக, வரும் 9ந் தேதி இரண்டு கார்களின் டீசல் மாடல்களும் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக கருதப்படுகிறது. லிவா ஹேட்ச்பேக் காரின் டீசல் கார் 2 மாடல்களிலும், எட்டியோஸ் செடான் கார் 3 மாடல்களிலும் அறிமுகப்படுத்த இருப்பதாக தெரிகிறது.

இந்த நிலையில், இரண்டு கார்களின் டீசல் மாடல்களுக்கான முன்பதிவை டொயோட்டோ துவங்கிவிட்டதாக டீலர் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. ரூ.50,000 முன்பணத்துடன் முன்பதிவு செய்யப்பட்டு வருவதாக அந்த தகவல்கள் கூறுகின்றன.

மாருதி ஸ்விப்ட், செவர்லே பீட், ஃபோர்டு பிகோ மற்றும் வோக்ஸ்வேகன் போலோ ஆகிய கார்களின் டீசல் மாடல்கள் சந்தையில் சக்கைபோடு போட்டு வருகின்றன. எனவே, எட்டியோஸ் மற்றும் லிவா கார்களின் டீசல் மாடல்களின் மூலம் சந்தையில் உயர்ந்த இடத்தை டொயோட்டோ பிடிக்கும் என்று கருதப்படுகிறது.

Most Read Articles
English summary
If recent media reports in the domestic markets are to be believed, the dealers of Japanese auto giant Toyota have started unofficial bookings of the upcoming diesel versions of the sedan Etios and hatchback Liva. Both Etios and Liva are speculated to hit the Indian roads on 9th of September. The reports further claim that while the Liva hatchback will be launched in two diesel variants, the Etios sedan will be rolled-out in three diesel variants. Diesel versions of both of these Etios series of cars were recently spotted in the Bangalore city.Some recent news reports claim that the bookings for both of these diesel version models are open unofficially at an initial payment of Rs 50,000.
Story first published: Wednesday, August 31, 2011, 12:28 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X