இந்த ஆண்டும் யூஸ்டு கார் விற்பனை வளர்ச்சி காணும்:வல்லுனர்கள் கணி்ப்பு

Used Cars
டெல்லி: "பெட்ரோல் விலை உயர்வு, கார் கடன்களுக்கான வட்டி அதிகரிக்கப்பட்டபோதிலும், யூஸ்டு கார் விற்பனை விறுவிறுப்பாக நடந்து வருகிறது; எனவே இந்த ஆண்டும் யூஸ்டு கார் மார்க்கெட் 15 சதவீத வளர்ச்சியை பெறும்," என ஆட்டோமொபைல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

புதிய கார் மார்க்கெட் வளர்ச்சி பெறும் அளவுக்கு இணையாக நம் நாட்டின் யூஸ்டு கார் எனப்படும் பயன்படுத்தப்பட்ட கார்களின் விற்பனையும் கணிசமான வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது. கடந்த ஆண்டில் நாட்டில் மொத்தமாக 25 லட்சம் புதிய கார்கள் விற்பனை செய்யப்பட்டன.

இதேபோன்று, யூஸ்டு கார் மார்க்கெட்டிலும் 25 லட்சம் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டில் யூஸ்டு கார் மார்க்கெட் 20 சதவீத வளர்ச்சியை பதிவு செய்தது.

இந்த நிலையில், கடந்த இரண்டு மாதங்களாக புதிய கார்களின் விற்பனையில் தொய்வு காணப்படுகிறது. கார் கடன்களுக்கான வட்டியை ரிசர்வ் வங்கி உயர்த்தியது, பெட்ரோல் விலை தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருவது ஆகியவற்றால் புதிய கார் வாங்கும் ஆர்வம் குறைந்துவிட்டதாக கருதப்படுகிறது.

இருப்பினும், யூஸ்டு கார் மார்க்கெட் வழக்கம்போல் நல்ல விற்பனை வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது. கடந்த ஆண்டைப்போல இல்லாவிட்டாலும், இந்த ஆண்டு 15 சதவீத விற்பனை வளர்ச்சியை யூஸ்டு கார் மார்க்கெட் பெறும் ஆட்டோமொபைல் வல்லுனர்கள் கூறுகின்றனர்.

யூஸ்டு கார் சந்தையில் ஈடுபட்டுள்ள மஹிந்திரா நடப்பு நிதி ஆண்டில் 50,000 கார்களை விற்பனை செய்ய இலக்கு வைத்துள்ளதாக கூறியுள்ளது. இதேபோன்று, மாருதி, டாடா உள்ளிட்ட நிறுவனங்களும் யூஸ்டு கார் சந்தையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பெற முனைந்துள்ளது.

Most Read Articles
English summary
Reports suggest that the used cars in India are selling like hot cakes and over 25 lakh cars were sold last year across the country. This marked a growth of 20 percent. In the current year, experts are expecting a growth of 15 percent though less compared to last year but it would be quite achievable in the wake of high inflation and rise in interest rate.
Story first published: Wednesday, June 8, 2011, 10:11 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X