புதிய கார் மார்க்கெட்டை ஓவர்டேக் செய்யும் பழைய கார் மார்க்கெட்

Used Car Market
டெல்லி: மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு புதிய கார்களின் விற்பனை 16 சதவீதம் வீழ்ச்சியடைந்த நிலையில், யூஸ்டு கார் மார்க்கெட்ட கிடுகிடுவென வளர்ந்து வருகிறது. அடுத்த மூன்று அல்லது நான்காண்டுகளில் யூஸ்டு கார் மார்க்கெட் 20 முதல் 25 சதவீத வளர்ச்சியை பெறும் வாய்ப்பு உள்ளதாக மார்க்கெட் நிபுணர்கள் கட்டியம் கூறுகின்றனர்.

பல்வேறு பிரச்னைகளால் புதிய கார் மார்க்கெட் கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஒற்றை இலக்க வளர்ச்சியை மட்டுமே கார் மார்க்கெட் எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அடுத்த உலக பொருளாதார சரிவும் கார் மார்க்கெட்டை பயமுறுத்தி வருகிறது.

இந்த நிலையில், எந்தவித சுணக்கமும் இல்லாமல் யூஸ்டு கார் மார்க்கெட் குறிப்பிடத்தக்க அளவி்ல் வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. தற்போது ஆண்டுக்கு 18,000 யூஸ்டு கார்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வரும் 2015ம் ஆண்டில் இந்தியாவில் ஆண்டுக்கு 40 லட்சம் பயன்படுத்தப்பட்ட செகண்ட் ஹேண்ட் கார்கள் விற்பனையாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், யூஸ்டு கார் மார்க்கெட் 20 முதல் 25 சதவீத வளர்ச்சியை எட்டும்.

இதுகுறித்து கார்நேஷன் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜெகதீஷ் கத்தார் கூறியதாவது:

" தற்போது புதிய கார் மற்றும் பழைய கார் விற்பனை வளர்ச்சி 1:1.1 என்ற வீதத்தில் இருக்கிறது. அடுத்த நான்காண்டுகளில் இது 1:2.5 வீதத்தில் மாறும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், இந்த ஆண்டு எப்படியிருந்தாலும் 13 முதல் 14 சதவீத வளர்ச்சியை யூஸ்டு கார் மார்க்கெட் எட்டிவிடும். யூஸ்டு கார்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு பேரம் பேசும் வாய்ப்பு கிடைக்கிறது. தவிர, பொருளாதார மந்தநிலையால், வாடிக்கையாளரின் கவனம் பழைய ேகார் மார்க்கெட் பக்கம் திரும்பும்," என்றார்.

Most Read Articles
English summary
india's used car market, which has so far faithfully followed new car sales, is now all set to zoom ahead as a sentiment slowdown hits car sales in autoville. According to industry estimates, the used car market, which is currently around 18 lakh units a year, is expected to clock anywhere between 20% and 25% growth in the next five years, vrooming beyond the 40-lakh mark by 2015. Of this,
Story first published: Tuesday, August 16, 2011, 13:45 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X