தமிழகத்தில் 1.40 கோடி வாகனங்கள்: போக்குவரத்து துறை தகவல்

கடந்த 1ந் தேதி நிலவரப்படி, 8 மாதங்களில் தமிழகத்தில் வாகனங்களின் எண்ணிக்கை 8 லட்சம் வரை உயர்ந்துள்ளது. குறிப்பாக, சென்னையில் கடந்த டிசம்பரில் 32 லட்சமாக இருந்த மொத்த வாகனங்களின் எண்ணிக்கை தற்போது 34 லட்சமாக அதிகரித்துள்ளது.
மேலும், தமிழகத்தின் மொத்த வாகனங்களின் எண்ணிக்கையில் 80 சதவீதம் இருசக்கர வாகனங்கள் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. மொத்த வாகன எண்ணிக்கையான 1.40 கோடியில், 1.15 கோடி அளவுக்கு இருசக்கர வாகனங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் கடந்த டிசம்பர் மாதம் 25.21 லட்சமாக இருந்த இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை தற்போது 26.34 லட்சமாக உயர்ந்துள்ளது.
சென்னையில் இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை 25 சதவீதமும், நான்கு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை 18 சதவீதம் அதிகரித்து வருகிறது. சென்னையில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 400 வாகனங்கள் பதிவு செய்யப்படுவதாகவும், இதில் 75 சதவீதம் இருசக்கர வாகனங்கள் என்றும் தெரிவிக்கப்பட்டு்ள்ளது.
புற்றீசல் பெருகும் வாகனங்களின் எண்ணிக்கை காரணமாக, சென்னை நகரில் போக்குவரத்து நெரிசல் கடுமையாக அதிகரிப்பதோடு, சுற்றுச்சூழல் மாசுபடுவதும் கணிசமாக அதிகரிக்கும் என்று சென்னை மாநகர வளர்ச்சி குழுமம் தெரிவிக்கிறது.


Click it and Unblock the Notifications








