அடு்த்த ஆண்டு இந்தியாவில் புதிய பீட்டில் அறிமுகம்: வோக்ஸ்வேகன் அறிவிப்பு

Volkswagen Beetle
டெல்லி: எத்துனை கார் மாடல்கள் வந்தாலும், ஆறிலிருந்து அறுபது வரை பார்த்தவுடன் ஆஹா ஓஹோ அற்புதம் என்று கூற வைக்கும் ஒரே கார் வோக்ஸ்வேகன் பீட்டில்.

கடந்த 72 ஆண்டுகாலமாக உலக சந்தையில் தனது வடிவமைப்பால் நிலைத்து நிற்கும் ஒரே கார் மாடல் என்ற பெருமை பீட்டிலுக்கு மட்டுமே சொந்தம். தலைமுறை தலைமுறையாக தனது வடிவத்தையும், பெயரையும் மாற்றாத பீட்டில் காருக்கு அது பிறந்த ஜெர்மனி மாத்திரமல்ல, உலகம் முழுவதும் ரசிகர் பட்டாளம் உண்டு.

காலசக்கரத்தில் கார்களின் வடிவமைப்பும், தொழில்நுட்பமும் 1,000 மடங்கு வேகத்தில் வளர்ந்தாலும், பீட்டில் வடிவமைத்தை மாற்றியமைக்க வோக்ஸ்வேகனுக்கு மனம் வரவில்லை. இருந்தாலும், மக்களின் ரசனையை கருத்தில்க்கொண்டு கொஞ்சம் புதுமை, கொஞ்சம் சொகுசு அம்சங்களை குழைத்து பீட்டிலை புதிய தலைமுறை அம்சங்களுடன் அறிமுகம் செய்து வருகிறது.

மூன்றாம் தலைமுறையை தொட்டுள்ள பீட்டில் கடந்த ஏப்ரல் மாதம் ஐரோப்பிய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. வோக்ஸ்வேகனின் கைவண்ணத்தில் பீட்டில் தற்போது முன்பைவிட கவர்ச்சியாக ஸ்போர்ட்டி லுக்கை பெற்றுள்ளது.

எடுப்பான முன்பக்க கிரில், பகல் நேர ரன்னிங் விளக்குகள், பின்பக்கம் வைன்டு சீல்டு, கண்ணாடி கூரை என அனைத்து இடங்களிலும் வோக்ஸ்வேகனின் கைப்பக்குவம் பளிச்சிடுகிறது.

அதிநவீன கீ லெஸ் என்ட்ரி தொழில்நுட்பம், வழிகாட்டும் புதிய நேவிகேஷன் சிஸ்டம், மனதை மயக்கும் வண்ணங்களில் லெதர் இருக்கைகள், ஸ்டாப்ஸ்டார்ட் தொழில்நுட்பம் ஆகியவை பீட்டிலை மூன்றாம் தலைமுறை காராக மாற்றியுள்ளது.

இந்த நிலையில், புதிய அம்சங்கள் நிறைந்த ஸ்போர்ட்டி லுக் கொண்ட மூன்றாம் தலைமுறை பீட்டிலை அடுத்த ஆண்டு இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக வோக்ஸ்வேகன் அறிவித்துள்ளது. இரண்டாம் தலைமுறை பீட்டில் கார் நியூ பீட்டில் என்று அழைக்கப்படுவதால், இந்த கார் 2012 பீட்டில் என்று பெயரிடப்பட்டுள்ளது.

அதிக மைலேஜ் தரும் வகையில் புளூமோஷன் தொழில்நுட்பத்துடன், 1.2லிட்டர்,1.4 லிட்டர், 1.6 லிட்டர் எஞ்சின் கொண்ட மூனறு மாடல்களில் பீட்டில் வருகிறது. இந்த கார் இறக்குமதி செய்து இநதியாவில் விற்பனை செய்ய வோக்ஸ்வேகன் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Most Read Articles
English summary
Volkswagen has confirmed the launch of the third generation Beetle in India. The Iconic Beetle will be seen on Indian roads by next year according to reports. The second generation Beetle was called the New Beetle and the latest model will only be called as the 2012 Beetle. The 2012 Beetle was unveiled by Volkswagen in the United States recently. The company has focussed on making the Beetle more Masculine after a research found most of the New Beetle's buyers were women. The 2012 Beetle gets a rear spoiler and sportier front end.
Story first published: Saturday, August 20, 2011, 14:18 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X