ஜூலை 1ந் தேதி முதல் டீசல் மாடல் வென்ட்டோ விலை உயர்கிறது

Vento Diesel
டெல்லி: வரும் ஜூலை 1ந் தேதி முதல் டீசல் மாடல் வென்ட்டோ விலையை 2.2 சதவீதம் உயர்த்தப்போவதாக வோக்ஸ்வேகன் அறிவித்துள்ளது. ஆனால், வரும் 30ந் தேதி வரை புக்கிங் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு தற்போதுள்ள விலையிலேயே விற்பனை செய்யப்படும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

உற்பத்தி செலவீனம் அதிகரிப்பால் இந்த விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அதேசமயம் பெட்ரோல் மாடல் வென்ட்டோ விலை உயர்த்தப்படவில்லை என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வோக்ஸ்வேகன் இயக்குனர் நீரஜ் கார்க் கூறியதாவது:

"உற்பத்தி செலவீனம் அதிகரிப்பால், டீசல் மாடல் வென்ட்டோ விலையை உயர்த்த முடிவு செய்துள்ளோம். ஏற்கனவே பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளதால் பெட்ரோல் மாடல் விலையை உயர்த்தி வாடிக்கையாளரை மேலும் சிரமத்தில் ஆழ்த்த விரும்பவில்லை.

மேலும், வரும் 30ந் தேதி வரை டீசல் வென்ட்டோ காரை புக்கிங் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு தற்போது உள்ள விலையிலேயே வென்ட்டோ கார் விற்கப்படும். இந்த சலுகையை வாடிக்கையாளர் பயன்படுத்திக்கொள்ளலாம்," என்றார்.

Most Read Articles
English summary
Volkswagen hiked the price of their Vento diesel. The price will go up by 2.2 per cent and will be effective from the 1st of July, 2011. On the other hand no increase in price of petrol variants vento.
Story first published: Monday, June 6, 2011, 16:41 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X