கார் திருட்டை காட்டிக்கொடுக்கும் வால்வோ சாப்ட்வேர்

GPS Vehicle Tracking
சென்னை: காரை திருடினால் உரிமையாளரை 'அலர்ட்' செய்யும் கார்களுக்கான புதிய மொபைல்போன் சாப்ட்வேரை வால்வோ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. அடுத்த ஆணடு முதல் இந்த புதிய சாப்ட்வேரை வால்வோ கார் உரிமையாளர்கள் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐபோன் மற்றும் ஆன்ட்ராய்டு மொபைல்போன்களில் இந்த புதிய சாப்ட்வேரை பதிவு செய்து கொள்ளலாம். ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தின் உதவியுடன் கார் இருக்கும் இடத்தையும், அதன் நிலையை பற்றியும மொபைல்போன் மூலம் டிரைவர் அல்லது காரின் உரிமையாளர் தெரிந்துகொள்ளும் வகையில் இந்த சாப்ட்வேர் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும், காரை வெளியாட்கள் யாராவது திறக்க முற்பட்டால், அதுகுறித்து உடனடியாக உரிமையாளரை செல்போன் மூலம் எச்சரிக்கும். இதன்மூலம், கார் திருட்டிலிருந்து உரிமையாளர்கள் காரை பாதுகாத்துக் கொள்ள முடியும் என வால்வோ தெரிவித்துள்ளது.

பிரிட்டன், ஜெர்மனி, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட உள்ள இந்த புதிய சாப்ட்வேர், அதைத்தொடர்ந்து இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
English summary
Volvo has launched a smart mobile application for all smart drivers to monitor their treasured and very precious cars from their iPhone and Android handsets.Best part is that the application will allow the driver to easily find their cars by detecting their position on the map. Apart from this feature, other keen point is its theft notification and the driver will be notified through the app via his iPhone or Android handset.
Story first published: Saturday, June 11, 2011, 11:11 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X