9 ஸ்பீடு கொண்ட புதிய டிரான்ஸ்மிஷன்: இசட்எப் அறிமுகம்

ஹூண்டாய், பென்ட்லீ ஆகிய நிறுவனங்களின் கார்களுக்கு இசட்எப் நிறுவனம் டிரான்மிஷன்களை சப்ளை செய்து வருகிறது.
இதுவரை 6 ஸ்பீடு மற்றும் 8 ஸ்பீடு டிரான்மிஷன்களை தயாரித்து வரும் இந்த நிறுவனம் தற்போது முதன்முறையாக 9 ஸ்பீடு கொண்ட ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனை அறிமுகம் செய்துள்ளது.
இந்த புதிய டிரான்மிஷன் சாதாரண டிரான்மிஷன்களைவிட 16 சதவீதம் கூடுதல் எரிபொருள் சிக்கனத்தையும், மிகக்குறைந்த அளவு கார்பன் புகையை வெளியிடும் வகையிலும் இருப்பதாக இசட்எப் தெரிவித்துள்ளது.
மேலும், ஸ்டார்ட்-ஸ்டாப், ஹைபிரிட், 4வீல் டிரைவ் தொழில்நுட்பம் கொண்ட கார்களுக்கு கச்சிதமாக பொருந்தும் வகையில் புதிய டிரான்மிஷன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அதிநவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் வந்துள்ள இந்த புதிய டிரான்ஸ்மிஷன் ப்ரண்ட் வீல் டிரைவ் கொண்ட கார்களுக்கு மட்டும் பொருத்திக்கொள்ளலாம் என அந்த நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








