விற்பனையை அதிகரிக்க புதிய மாடல்களை களமிறக்கும் நிசான்

Nissan X-trail
இந்த ஆண்டு விற்பனையை உயர்த்த திட்டமிட்டுள்ள நிசான், அடுத்த 24 மாதங்களில் 20 புதிய கார் மாடல்களை அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது.

இதற்காக, பல்வேறு நாட்டு மார்க்கெட்டுகளில் தனது புதிய மார்க்கெட் யுக்தியை செயல்படுத்த அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. ஜப்பானில் 2 பெரிய கார் உற்பத்தியாளராக திகழும் நிசான் நிறுவனம் கடந்த ஆண்டு அமெரிக்க சந்தையில் நிசான் நிறுவனம் ஓரளவு நல்ல விற்பனையை வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

கடந்த 2010ம் ஆண்டில் அமெரிக்காவில் 7.8 சதவீதம் அளவுக்கு இருந்த நிசான் மார்க்கெட் பங்களிப்பு கடந்த ஆண்டு 8.2 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு நிசான் விற்பனை 15 சதவீதம் உயர்ந்துள்ளது.

இந்த நிலையில், இந்த ஆண்டு அமெரிக்க சந்தை உள்பட பெரும்பாலான நாடுகளில் தனது மார்க்கெட் பங்களிப்பை அதிகரிக்கவும், புதிய மாடல்களை அறிமுகப்படுத்தி விற்பனையை கணிசமாக உயர்த்த நிசான் திட்டமிட்டுள்ளது.

டெட்ராய்ட் ஆட்டோ கண்காட்சியில் கலந்து கொண்ட நிசான் கிரியேட்டிவ் பிரிவு தலைவர் ஷிரோ நகமுரா கூறுகையில்," புதிய மாடல்கள் எதுவும் இல்லாமல் அமெரிக்க சந்தையில் ஓரளவு நல்ல விற்பனயை வளர்ச்சியை பதிவு செய்துள்ளோம்.

எனவே, கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கணிசமான விற்பனை வளர்ச்சியை எட்டுவோம்," என்றார்.

இதனிடையே, அமெரிக்கா தவிர, சீனா, பிரேசில் மற்றும் ஐரோப்பிய சந்தைகளில் விற்பனை வளர்ச்சியை அதிகரிக்கும் முயற்சிகளை நிசான் மேற்கொள்ளவுள்ளது. இதற்காக, அடுத்த 2 ஆண்டுகளில் மேம்படுத்தப்பட்ட மாடல்கள் மற்றும் புதிய மாடல்கள் என 20 கார் மாடல்களை களமிறக்க நிசான் திட்டமிட்டுள்ளது.

Most Read Articles
English summary
Japanese car maker Nissan motors will roll out 20 new or facelifted car models in next 24 months. The new models will boost Nissan's sales.
Story first published: Tuesday, January 10, 2012, 17:40 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X