கார் திருட்டை தடு்க்கும் புதிய ஜப்பானிய தொழில்நுட்பம்

புதிய தொழில்நுட்ப முறையில், டிரைவர் இருக்கையில் டிரைவரின் எடையை அறிந்து கொள்வதற்காக சென்சார்கள் பொருத்தப்பட்டிருக்கும். இந்த சென்சார்கள் சிறிய கம்ப்யூட்டர்களுடன் இணைக்கப்பட்டிருக்கும். அந்த கம்ப்யூட்டரில் காரை பயன்படுத்துபவர்களின் எடையை பதிவு செய்துவிட வேண்டும்.
கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்படாத எடை கொண்டவர்கள் காரை ஸ்டார்ட் செய்ய முடியாது. மேலும், வேறுபட்ட எடை கொண்டவர்கள் டிரைவர் இருக்கையில் அமர்ந்து காரை ஸ்டார்ட் செய்ய முயற்சித்தால் காரில் உள்ள அலாரம் ஒலிக்க ஆரம்பித்துவிடும்.
இந்த புதிய தொழில்நுட்பம் சோதனைகட்டங்களில் 98 சதவீதம் வரை துல்லியமாக செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த புதிய தொழில்நுட்பம் செயல்பாட்டுக்கு வரும்போது நடைமுறையில் சிறப்பாக செயல்படுமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காரில் பதிவு செய்யப்பட்டிருக்கும் எடையையுடைய ஒருவர் காரை ஸ்டார்ட் செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதால், நூறு சதவீதம் பாதுகாப்பான தொழில்நுட்பமாக இதை கருதமுடியாது.
மேலும், அவசர காலத்தில் டிரைவரை தவிர வேறு ஒருவர் காரை ஸ்டார்ட் செய்யவும் முடியாது என்பதால் இந்த புதிய தொழில்நுட்பம் எந்தளவுக்கு மார்க்கெட்டில் வெற்றியை பெறும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








