2011ம் ஆண்டு 15 விருதுகளை அள்ளிக்குவித்த ஆடி கார் நிறுவனம்

Audi A6
கடந்த ஆண்டு இந்திய ஆட்டோமொபைல் துறையிலிருந்து 15 மதிப்புமிக்க விருதுகளை ஆடி தயாரிப்புகள் பெற்றுள்ளன.

ஜெர்மனியை சேர்ந்த ஆடி கார்கள் சர்வதேச அளவில் வாடிக்கையாளர்களால் பெரிதும் விரும்பப்படுகின்றன. இந்தியாவிலும் ஆடி கார்கள் வேகமாக பிரபலமடைந்து வருகின்றன.

இதனால், கடந்த ஆண்டு அந்த நிறுவனம் நல்ல விற்பனை வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. மேலும், இந்திய ஆட்டோமொபைல் துறை பத்திரிக்கைகள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து ஆடி தயாரிப்புகள் 15 விருதுகளை கடந்த ஆண்டு பெற்று வியக்க வைத்துள்ளன.

ஆடியின் ஏ8எல்,ஏ6,ஏ7 மற்றும் ஆர்எஸ்5 ஆகிய சொகுசு கார்கள் ஆட்டோத்துறையிலிருந்து விருதுகளை பெற்றுள்ளன. இதில், ஆடி ஏ8எல் சொகுசு கார் சிஎன்பிசி டிவி18 பத்திரிக்கை குழுமத்தின் கடந்த ஆண்டின் சிறந்த இறக்குமதி காருக்கான விருதை பெற்றுள்ளது.

இதுதவிர, என்டிடிவியின் கார் அண்ட் பைக் விருதையும் பெற்றுள்ளது. மேலும், எக்கானமிக் டைம்ஸ் நிறுவனத்தின் ஸிக்வீல்ஸ் இதழிடமிருந்து சிறந்த சிபி சொகுசு செடான் காருக்கான விருதையும் பெற்றுள்ளது.

இதேபோன்று, ஆடி ஏ6 கார் மோட்டாரிங் மற்றும் சிஎன்பிசி டிவி 18 பத்திரிக்கைகளின் கடந்த ஆண்டின் சிறந்த பிரிமியம் காருக்கான விருதை பெற்றுள்ளது. கார்வாலே, புளூம்பெர்க் யுடிவி விருதுகளையும் பெற்றுள்ளது.

ஆடியின் ஆர்எஸ்5 கார் கடந்த ஆண்டின் சிறந்த பெர்பார்மென்ஸ் காராக என்டிடிவி கார் அண்ட் பைக் ஆட்டோமொபைல் மீடியா நிறுவனம் மற்றும் டாப் கியர் பத்திரிக்கை விருது வழங்கியுள்ளது.

ஆடியின் ஆர்8 ஸ்பைடருக்கு சிறப்பு விருதையும், ஏ7 காருக்கு சிறந்த வடிவமைப்பு மற்றும் ஸ்போர்ட்பேக் காராக டாப் கியர் இதழ் விருது வழங்கியுள்ளது.

கடந்த ஆண்டில் மொத்தம் 15 மதிப்புமிக்க ஆட்டோமொபைல் விருதுகளை ஆடி நிறுவனம் பெற்றுள்ளது. இந்த நிலையில், கடந்த ஆண்டு ஆடியின் கார் விற்பனை 84 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த 2010ம் ஆண்டில் 3003 கார்களை விற்பனை செய்த ஆடி கடந்த ஆண்டு 5511 கார்களை விற்பனை செய்துள்ளது.

Most Read Articles
English summary
Audi, the German luxury car manufacturer, has swept the various automotive awards in India and bagged 15 prestigious awards for the year 2011. After recording the highest sales volume for Audi in India to date, Audi A8L, Audi A6, Audi A7 and Audi RS5 have garnered top honours of the industry, underlining Audi’s brand essence “Vorsprung durch Technik”.
Story first published: Saturday, January 28, 2012, 14:48 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X