பார்க்கிங்கின்போது தானாக மடங்கி விரியும் எலக்ட்ரிக் கார்

Hiriko Electric Car
60 இஞ்ச் வரை தனது அளவை தானியங்கி முறையில் மடங்கி விரியும் புதிய கான்செப்ட் எலக்ட்ரிக் கார் புருசெல்ஸ் நகரில் அறிமுகம் செய்யப்படடது.

இரண்டு பேர் பயணம் செய்யும் வசதிகொண்ட இந்த காரை ஸ்பெயினை சேர்ந்த எம்ஐடி மீடியா லேப் என்ற நிறுவனம் வடிவமைத்துள்ளது.

புருசெல்ஸ் நகரில் உள்ள ஐரோப்பிய கமிஷனின் அரங்கில் இந்த கார் சமீபத்தில் பார்வைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ஹிரிகோ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கார் 100 இஞ்ச் நீளம் கொண்டதாக இருக்கிறது.

சுருங்கி விரிவதற்கு ஏதுவாக இந்த காரின் மின் மோட்டார், பிரேக் சிஸ்டம் ஆகியவை சக்கரங்களிலேயே பொருத்தப்பட்டிருக்கிறது. இதன் மடங்கி விரியும் தொழில்நுட்பம் தானியங்கி முறையில் செயல்படும்.

முன்பக்கத்திலிருந்து பின்பக்கம் மடங்கி விரியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. லித்தியம் அயான் பேட்டரிகள் இதன் கீழ்ப்பகுதியில் பொருத்தப்பட்டிருக்கிறது.

இந்த கார் அதிகபட்சம் மணிக்கு 120 கிமீ வேகத்தில் செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பார்க்கிங் பகுதியில் சாதாரண கார்களை நிறுத்துவதற்கு தேவையான மூன்றில் ஒரு பகுதி இடம் இருந்தால் போதுமானது.

இந்த கார் தானாக பார்க்கிங் செய்துகொள்ளும். அடுத்த ஆண்டு முதல் வர்த்தக ரீதியில் உற்பத்தி செய்வதற்கான முயற்சிகள் நடந்து வருவதாக எம்ஐடி மீடியா லேப் தெரிவித்துள்ளது.

Most Read Articles
English summary
The Spain automobile researchers has designed a proto-type foldable electric car christined Hiriko. The hiriko has displayed in European commission head quarters in Brussels. The foldable electric car provide 120 kmph driving range, says MIT media lab.
Story first published: Friday, January 27, 2012, 16:37 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X