நானோவை விட குட்டிக் காரை அறிமுகப்படுத்தியது பஜாஜ் ஆட்டோ

டாடா நானோவைவிட புதிய குட்டிக் காரை உருவாக்கி வருவதாக பஜாஜ் ஆட்டோ ஏற்கனவே தெரிவித்திருந்தது. ரினால்ட்-நிசான் கூட்டணியில் புதிய குட்டிக் காரை விற்பனை செய்யவும் பஜாஜ் ஆட்டோ திட்டமிட்டிருந்தது.

ஆனால், பஜாஜ் குட்டிக் கார் தரநிலைகளில் எதிர்பார்த்தபடி இல்லாததால் இந்த திட்டத்தில் இணைய விருப்பமில்லை என ரினால்ட் ஏற்கனவே அறிவித்திருந்தது.

இதனால், பஜாஜ் குட்டி திட்டம் கிடப்பில் போடப்படுமா என்ற நிலைமை இருந்து வந்தது. இந்த நிலையில், விடாப்பிடியாக தனது குட்டிக் காரை உருவாக்கி இன்று டெல்லி ஆட்டோ கண்காட்சியில் பார்வை படுத்தியுள்ளது பஜாஜ் ஆட்டோ.

ஆர்இ-60 என்ற குறியீட்டு பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த குறைந்த விலை காரில் 4 பேர் பயணம் செய்யலாம்.

சோதனை நிலைகளில் லிட்டருக்கு 40 கிமீ மைலேஜ் செல்வதாக பஜாஜ் ஆட்டோ தெரிவித்துள்ளது. இந்த நிலையில், தினசரி பயன்பாட்டின்போது கூட லிட்டருக்கு 35 கிமீ வரை மைலேஜ் தரும் என்று கருதப்படுகிறது.

இந்த காரில் ட்வின் ஸ்பார்க் தொழில்நுட்பம் கொண்ட 200சிசி காரின் பின்புறத்தில் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த புதிய குட்டிக் காரில் 44 லிட்டர் கொள்ளளவு கொண்ட டிக்கி மற்றும் இருக்கைகளுக்கு கீழ் 95 லிட்டர் ஸ்டோரேஜ் பகுதியும் இருக்கிறது.

தற்போது உலகின் குறைந்த விலை கார் என்ற பெருமையை பெற்றுள்ள டாடா நானோவை விட இந்த கார் குறைந்த விலை கொண்ட காராக விற்பனைக்கு வரும் என்று கருதப்படுகிறது.

ரினால்ட்-நிசான் கோரினால் இந்த புதிய குட்டிக் கார் தயாரித்து வழங்கப்படும் என்று பஜாஜ் ஆட்டோ தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், புதிய குட்டிக் கார் ஆட்டோ ரிக்ஷாவுக்கு மாற்றாக விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது. இந்த புதிய கார் எல்பிஜி வெர்ஷனிலும் கிடைக்கும் என்று தெரிகிறது.

புதிய குட்டிக் கார் ரூ.1.25 லட்சம் விலையில் விற்பனைக்கு வரும் என்று கருதப்படுகிறது. இந்த புதிய குட்டிக் கார் மூலம் 4 சக்கர வாகன தயாரிப்பிலும் பஜாஜ் ஆட்டோ நுழைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
The Country's second largest two wheeler maker Bajaj auto has unveilesd of its much awaited ultra low cost car in Delhi auto Expo. The car christined RE60 and it equipped with 200 cc engine.
Story first published: Thursday, January 5, 2012, 12:25 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X