குட்டிக் கார் உற்பத்தி: ரினால்ட்-நிசான் பதிலுக்காக காத்திருக்கும் பஜாஜ்

Bajaj RE60
"நாங்கள் வடிவமைத்துள்ள புதிய குட்டிக்காரை ரினால்ட்-நிசான் அதிகாரிகள் பார்வையிட்டு சென்றுள்ளனர். ஆனால், காரை விற்பனை செய்வது குறித்து அவர்கள் இதுவரை எந்த பதிலும் தெரிவிக்கவில்லை, என்று பஜாஜ் ஆட்டோ நிர்வாக இயக்குனர் ராஜீவ் பஜாஜ் கூறியுள்ளார்.

கடந்த 2007ம் ஆண்டு புதிய குட்டிக்கார் திட்டத்தை பஜாஜ் ஆட்டோ துவங்கியது. வடிவமைப்பு மற்றும் உற்பத்தியை பஜாஜ் ஆட்டோவும், மார்க்கெட்டிங் மற்றும் விற்பனையை ரினால்ட்-நிசான் கூட்டு நிறுவனம் கவனித்துக்கொள்ளும் வகையில் திட்டமிட்டு பணிகள் துவங்கப்பட்டன.

ஆனால், பஜாஜ் ஆட்டோ வடிவமைத்த குட்டிக் காரின் வடிவமைப்பு மற்றும் தரம் எதிர்பார்த்த அளவு இல்லை என்றும் கடந்த ஆண்டு ரினால்ட் தெரிவித்தது. மேலும், இதுதொடர்பாக, பஜாஜ் ஆட்டோவுடன் எந்த ஒப்பந்தத்தையும் செய்ய விரும்பவில்லை என்றும் தெரிவித்துவிட்டது.

இந்த நிலையில், டெல்லி ஆட்டோ கண்காட்சியில் தனது குட்டிக்காரை பஜாஜ் ஆட்டோ பார்வைக்கு அறிமுகப்படுத்தியது. ஆட்டோவுக்கு மாற்றாக இருக்கும் வகையில் இந்த குட்டிக் காரை பஜாஜ் ஆட்டோ வடிவமைத்திருப்பதாக ஆட்டோமொபைல் துறையினர் கருத்து தெரிவித்தனர்.

இதனிடையே, நேற்று கேடிஎம் டியூக் 200 பைக்கின் அறிமுக விழா நடந்தது. இதில், பஜாஜ் ஆட்டோ நிர்வாக இயக்குனர் ராஜீவ் பஜாஜ் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:

"எங்களது சிறிய காரை ரினால்ட்-நிசான் அதிகாரிகள் பார்வையிட்டு சென்றுள்ளனர். அவர்களுக்கு இந்த காரை விற்பனை செய்வதில் ஆர்வம் இருக்கிறதா என்பது குறித்து அவர்கள் இதுவரை எந்த பதிலையும் எங்களக்கு தெரிவிக்கவில்லை," என்று கூறினார்.

Most Read Articles
English summary
Renault-Nissan officials have had looked at Bajaj’s new 'four-wheeler' RE60, but still they are not reply to bajaj if they are interested in selling the vehicle, Bajaj Auto’s MD told reporters.
Story first published: Wednesday, January 25, 2012, 17:40 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X