மினி பிராண்டுக்கு ஆரவார வரவேற்பு; 6 நாளில் 100 கார்கள் புக்கிங்!

Mini Cooper
மினி பிராண்டு கார்கள் இந்திய மார்க்கெட்டில் அமோக வரவேற்பை பெற்றுள்ளன. அறிமுகம் செய்யப்பட்டு 6 நாட்களில் மட்டும் 100 கார்கள் புக்கிங் செய்யப்பட்டுள்ளன.

பிரிட்டனை சேர்ந்த பிரிமியம் கார் தயாரிப்பாளரான மினி பிராண்டு பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் துணை நிறுவனமாக செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில், டெல்லி ஆட்டோ கண்காட்சியில் மினி பிராண்டின் பிரிமியம் கார்களான மினி கூப்பர், மினி கூப்பர் எஸ், மினி கூப்பர் கன்வெர்ட்டிபிள் மற்றும் மினி கன்ட்ரிமேன் கார்களை பிஎம்டபிள்யூ அறிமுகம் செய்தது.

மினி பிராண்டு கார்களை பிரிட்டனிலிருந்து இறக்குமதி செய்து விற்பனை செய்ய இருப்பதாக பிஎம்டபிள்யூ தெரிவித்துள்ளது. மேலும், இந்த ஆண்டு 200 கார்களை மட்டும் விற்பனை செய்ய பிஎம்டபிள்யூ திட்டமிட்டுள்ளது. வரும் ஏப்ரலில் கார் டெலிவிரியை பிஎம்டபிள்யூ துவங்க உள்ளது.

இந்த நிலையில், அறிமுகம் செய்யப்பட்டு முதல் 6 நாட்களிலேயே 100 மினி கார்கள் புக்கிங் செய்யப்பட்டுள்ளதாக பிஎம்டபிள்யூ தெரிவித்துள்ளது.

மும்பை மற்றும் டெல்லியில் மினி பிராண்டு கார்களுக்கு தனியாக ஷோரூம் திறக்கப்பட உள்ளதாக பிஎம்டபிள்யூ தெரிவித்துள்ளது. ரூ.25 லட்சம் முதல் ரூ.37 லட்சம் விலையில் 5 மினி பிராண்டு கார்களை அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
BMW subsidiary Mini brand is overhelming reponse in Indian market. The iconic Mini brand has bagged 100 car bookings in just 6 days of its launch.
Story first published: Thursday, January 12, 2012, 11:27 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X