410 கிமீ வேகத்தில் பறக்கும் உலகின் அதிவேக டாப்லெஸ் புகாட்டி கார்

Bugatti Veyron Sport Vitessi
உலகின் அதிவேகத்தில் செல்லும் திறன் வாயந்த டாப் இல்லாத கன்வெர்ட்டிபில் காரை புகாட்டி அறிமுகம் செய்துள்ளது. ஜெனிவா மோட்டார் ஷோவில் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும் இந்த கார் மணிக்கு அதிகபட்சம் 410 கிமீ வேகம் வரை செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேரோன் கிராண்ட் ஸ்போர்ட் விட்டெஸி என்ற பெயரில் வந்திருக்கும் இந்த காரில் 1200 பிஎச்பி திறனை வெளிப்படுத்தும் திறன் கொண்ட 7.9 லிட்டர் டபிள்யூ 16 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. எந்த ஒரு வேகத்தில் செல்லும்போதும் தடை ஏற்படுத்தாத வகையில் இந்த கார் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதில், விட்டெஸி ரக 20 இஞ்ச் அலாய் வீல் பொருத்தப்பட்டிருப்பதால் அதிக உறுதிகொண்டதாக இருக்கும். இதன் ஸ்பாய்லர் காற்றை கிழித்துக்கொண்டு செல்லும்போது வரும் சப்தத்தையும் வெகுவாக குறைக்கும். மேலும், இந்த காரின் பிரத்யேக வடிவமைப்பால் டாப் இல்லாத கார் போன்ற உணர்வை டிரைவருக்கு ஏற்படுத்தாது என்று புகாட்டி தெரிவிக்கிறது.

காரின் உட்புறமும் காற்று உட்புகாத வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளதால், இந்த கார் மணிக்கு அதிகபட்சம் 410 கிமீ வேகம் வரையிலும் செல்லும் என்று புகாட்டி தெரிவிக்கிறது. ஜெனிவா மோட்டார் ஷோவில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள இந்த கார் உலகின் அதிவேக டாப்லெஸ் கார் என்ற பெருமையை பெற்றுள்ளது.

Most Read Articles
English summary
Bugatti has unveiled world fastest convertible Grand Sport Vitesse at Geneva Motor Show. Bugatti Grand Sport Vitesse Powered by 8.0 liter W16 engine. It will produce 1200 bhp power.
Story first published: Monday, March 12, 2012, 10:14 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X