விற்பனை மந்தம்: விலை உயர்வை தவிர்க்க முன்னணி கார் நிறுவனங்கள் முடிவு

Hyundai Eon
தங்களது கார் விற்பனை தொடர்ந்து மந்தமாக இருப்பதால், விலை உயர்வை தவிர்க்க முன்னணி நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

கடந்த ஆண்டு உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் கார் நிறுவனங்களின் விற்பனை எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. இதனால், மொத்த கார் விற்பனை வளர்ச்சி வெகுவாக குறைந்துள்ளது.

இந்த நிலையில், மாருதி, ஹூண்டாய் உள்ளிட்ட நிறுவனங்கள் உற்பத்தி செலவீனங்களை காரணம் காட்டி, ஆண்டுதோறும் ஜனவரியில் கார் விலையை உயர்த்துவது வழக்கம்.

ஆனால், கடந்த ஆண்டு அந்த நிறுவனங்களின் கார் விற்பனை குறைந்ததாலும், கார் மார்க்கெட் எதிர்பார்த்த அளவுக்கு எழுச்சி பெறாததாலும் கார் விலை உயர்வை தவிர்க்க மாருதி, ஹூண்டாய், வோக்ஸ்வேகன் உள்ளிட்ட நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், கார் விற்பனை ஏற்றம் பெற்றால் உடனடியாக விலை உயர்வை அறிவிக்கவும் அந்த நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. விலை உயர்வு முடிவை எடுத்துள்ள பல முன்னணி நிறுவனங்களும் அறிவிப்பை வெளியிடுவதற்கு தயக்கம் காட்டி வருகின்றன.

மேலும், டெல்லி ஆட்டோ கண்காட்சியில் பல புதிய மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவை இன்னும் ஓரிரு மாதங்களில் விற்பனைக்கு வர இருக்கின்றன. எனவே, வாடிக்கையாளர்கள் அந்த கார்களை வாங்குவதற்கு திட்டமிட்டுள்ள காத்திருக்கின்றனர்.

இதனால், தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் மாடல்களின் விலையை உயர்த்தினால் விற்பனை பாதிக்கப்படும் அச்சமும் கார் நிறுவனங்கள் மத்தியில் நிலவுவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

Most Read Articles
English summary
Three major carmakers, Maruti Suzuki, Hyundai Motors and Volkswagen have decided not to increase the prices of their cars despite increase in manufacturing costs. This decision has been taken considering the decreased demand for cars.
Story first published: Monday, January 16, 2012, 13:47 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X