புதிய கார் அப்ளிகேஷன்களை உருவாக்குவதில் கார் நிறுவனங்கள் தீவிரம்

Car Accessories
தட்ப வெப்பம், காற்றின் வேகம் ஆகியவற்றை துல்லியமாக கணித்து தரும் வகையில், புதிய அப்ளிகேஷன்களை உருவாக்குவதில் கார் நிறுவனங்கள் தற்போது தீவிர கவனம் செலுத்தி வருகின்றன. புதிய கார் அப்ளிகேஷன்களை தயாரித்து தருமாறு இந்திய மாணவர்களிடம் ஃபோர்டு கேட்டுக்கொண்டுள்ளது.

கார்களில் வெறும் பொழுதுபோக்காக இருந்த மின்னணு சாதனங்கள் தற்போது பரிணாம வளர்ச்சி கண்டு வருகிறது. புதிய இடங்களுக்கு யாருடைய தயவும் இல்லாமல் செல்லும் வழிகாட்டியாகவும், அருகிலுள்ள பெட்ரோல் பங்க், ஹோட்டல்கள் உள்ளிட்ட தகவல்களை தற்போது இன்போடெயின்மென்ட் சாதனங்கள் தருகின்றன.

தவிர, வீடியோ கேம், பாடல்கள் மற்றும் வீடியோக்களை இன்போடெயின்மென்ட் சிஸ்டம் மூலம் டவுண்லோடு செய்யவும் முடியும்.

அந்த வகையில், தற்போது கார்களில் வசதிகளை கூட்டிக்கொண்டே செல்லும் இன்போடெயின்மென்ட் சிஸ்டத்தை தற்போது அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் முயற்சிகளை கார் நிறுவனங்கள் மேற்கொண்டுள்ளன.

நேவிகேஷன் தவிர, தட்ப வெப்பம், காற்றின் வேகம் மற்றும் அழுத்தம் ஆகியவற்றை காருக்குள் உட்கார்ந்தவாறே தெரிந்துகொள்ளும் வகையில் புதிய அப்ளிகேஷன்களை உருவாக்கும் முயற்சிகளை அமெரிக்காவை சேர்ந்த ஜெனரல் மோட்டார்ஸ், ஃபோர்டு ஆகிய கார் நிறுவனங்கள் தீவிரப்படுத்தியுள்ளன.

இந்தியாவிலுள்ள ஐஐடி போன்ற கல்வி நிறுவனங்களை சேர்ந்த மாணவர்களை கார்களுக்கான புதிய அப்ளிகேஷன்களை தயாரித்து தருமாறு அந்த நிறுவனங்கள் கேட்டுக்கொண்டுள்ளன. தனது ஃபிகோ காருக்கு இதுபோன்று புதிய அப்ளிகேஷன்களை தயாரித்து வழங்குமாறு ஃபோர்டு அழைப்பு விடுத்துள்ளது.

இதனிடையே,கடந்த 2010ம் ஆண்டில் 1.4 மில்லியனாக இருந்த கார் அப்ளிகேஷன்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை வரும் 2015ம் ஆண்டில் 28 மில்லியனாக உயருமாம்.

ஆப்பிள் மற்றும் கூகுள் வெளியிட்டுள்ள கார் அப்ளிகேஷன்கள் பெரும் வெற்றி பெற்றுள்ளன. இதனால், கார்களுக்கான அப்ளிகேஷன்களை உருவாக்குவதில் போட்டா போட்டி உருவாகியுள்ளது.

Most Read Articles
English summary
Auto majors like General Motors and Ford are working on technologies that will let cars run applications bringing computer power within the car. These applications will help users drive better, navigate and know many more info like weather, air pressure etc. It will also raise the entertainment quotient in the cars by letting users download videos, music, games etc.
Story first published: Saturday, March 24, 2012, 15:33 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X