டீசல் கார்கள் மீது 10 சதவீதம் கூடுதல் வரி விதிக்க மத்திய அரசு முடிவு?

Maruti Swift
டீசல் கார்கள் மீது 10 சதவீதம் கூடுதல் வரி விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வரும் மார்ச்சில் தாக்கல் செய்யப்பட இருக்கும் மத்திய பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று அந்த தகவல்கள் கூறுகின்றன.

பெட்ரோல் கார்களை விட டீசல் கார்கள் சுற்றுச்சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்துவதாக கூறி டீசல் கார்கள் மீது டெல்லி அரசு ஏற்கனவே கூடுதல் வரி விதித்து வருகிறது. இதே முறையை பின்பற்றி டீசல் கார்கள் மீது கூடுதல் வரிவிதிக்க மத்திய அரசும் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் தொடர்பான மத்திய நாடாளுமன்ற நிலைக்குழு டீசல் கார்கள் மீது 10 கூடுதலாக வரி விதிக்க மத்திய நிதி அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்துள்ளது. இதையடுத்து, வரும் மார்ச்சில் தாக்கல் செய்யப்பட இருக்கும் மத்திய பட்ஜெட்டில் இதுகுறிப்பு அறிவிப்பு வெளியாக உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

புதிய கார் வாங்கும்போது கூடுதல் வரியை வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டிருக்கும். மேலும், இந்த கூடுதல் வரி டீசல் மீது மத்திய அரசு வழங்கும் மானியத்தால் பாதிக்கப்படும் எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில், கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் இதுவரை டீசல் கார்களின் விற்பனை 24 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது. அதேவேளை, பெட்ரோல் கார்கள் விற்பனை 16 சதவீதம் குறைந்துவிட்டது.

இதனால், டீசல் கார் மாடல்களை அறிமுகப்படுத்துவதில் கார் நிறுவனங்கள் தீவிரம் காட்டி வருகின்றன. மேலும், டீசல் கார் மாடல்களுக்காக அதிக முதலீடு செய்யவும் திட்டமிட்டுள்ளன.

இந்த நிலையில், டீசல் கார்கள் மீது கணிசமாக மத்திய அரசு வரி விதிக்க திட்டமிட்டுள்ள தகவல் விரிவாக்கத்தில் ஈடுபட்டுள்ள கார் நிறுவனங்களையும், கார் வாங்க திட்டமிட்டுள்ள வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Most Read Articles
English summary
Diesel car prices will go up from march as the central government has planning to impose 10% additional tax on Diesel cars. The proposal has already under the consideration of the central government. The Government may announce official statement in this regard in upcoming budget.
Story first published: Saturday, January 14, 2012, 17:03 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X