மாருதிக்கு டீசல் எஞ்சின் சப்ளை செய்யும் ஃபியட்

Maruti Swift
ஆண்டுக்கு ஒரு லட்சம் டீசல் எஞ்சின்களை சப்ளை செய்வதற்காக ஃபியட்-மாருதி இடையில் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதனால், ஸ்விப்ட் டீசல் காரின் வாடிக்கையாளர் காத்திருப்பு காலம் வெகுவாக குறையும் என்று கருதப்படுகிறது.

கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட மாருதி ஸ்விப்ட் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. 1.08 லட்சம் புக்கிங்குகளை பதிவு செய்து புதிய வரலாற்றை எழுதியது. இந்த புக்கிங்கில் 80 சதவீதம் டீசல் ஸ்விப்ட் கார் பெற்றது.

இதனால், டீசல் ஸ்விப்ட் காருக்கான காத்திருப்பு காலம் 8 மாதங்கள் வரை நீடிக்கிறது. இந்த நிலையில், டீசல் எஞ்சின் பற்றாக்குறையை தவிர்க்க ஃபியட் நிறுவனத்திடமிருந்து டீசல் எஞ்சின் சப்ளையை பெற மாருதி முடிவு செய்தது.

இதுகுறித்து ஃபியட்டுடன் பல கட்ட பேச்சுவார்த்தையை மாருதி நிறுவனம் நடத்தியது. இதைத்தொடர்ந்து, டீசல் எஞ்சின் சப்ளை தொடர்பாக இரு நிறுவனங்களுக்கும் இடையில் தற்போது ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

ஆண்டுக்கு 1 லட்சம் டீசல் எஞ்சின் சப்ளை:

இந்த ஒப்பந்தத்தின்படி, 1.3 லிட்டர் மல்டி ஜெட் டீசல் எஞ்சின்களை மாருதிக்கு ஃபியட் சப்ளை செய்ய உள்ளது. ஆண்டுக்கு ஒரு லட்சம் டீசல் எஞ்சின்களை மூன்று ஆண்டுகளுக்கு மாருதிக்கு ஃபியட் சப்ளை செய்யும்.
மேலும், இந்த மாத கடைசியில் மாருதிக்கு சப்ளை செய்வதற்கான டீசல் எஞ்சின்களின் உற்பத்தியை ஃபியட் துவங்க உள்ளது. அடுத்த மாதத்திலிருந்து டீசல் எஞ்சின் சப்ளை துவங்கப்பட உள்ளது.

காத்திருப்பு காலம் குறையும்:

ஸ்விப்ட் கார் மட்டுமின்றி, புதிதாக அறிமுகம் செய்யப்பட இருக்கும் குட்டி டிசையர் காரும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின்தான் பொருத்தப்பட இருக்கிறது. எனவே, இந்த புதிய ஒப்பந்தத்தின் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும் மாருதி கார்களின் காத்திருப்பு காலம் வெகுவாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Fiat has finally signed an agreement with Maruti Suzuki to supply is fuel efficient Multijet diesel engines to Maruti Suzuki. This move will help the Indian carmaker reduce the backl,og of production of the new Swift and also reduce the hatchback's waiting period. According to the agreement signed between the carmakers, fiat will be supplying one lakh diesel engines to Maruti Suzuki per year for a period of three years. Reports say Fiat will begin production of the engines at its plant from the fourth week of January with supplies starting soon after.
Story first published: Friday, January 20, 2012, 16:03 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X