நெதர்லாந்தில் பறக்கும் கார் வெற்றிகரமாக சோதனை

அமெரிக்காவில் பறக்கும் கார் இன்னும் ஓரிரு ஆண்டுகளில் வர்த்தக ரீதியில் விற்பனைக்கு வர இருக்கும் நிலையில், நெதர்லாந்திலும் பறக்கும் கார் சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. வரும் 2014ம் ஆண்டு முதல் இந்த பறக்கும் கார் விற்பனைக்கு வர உள்ளது.

பிஏஎல்வி என்ற குறியீட்டு பெயரில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பறக்கும் கார் மூன்று சக்கரங்களை கொண்டுள்ளது.இதன் மேல் பகுதியில் மடங்கி விரியும் வசதிகொண்ட காற்றாடிகள் இருக்கின்றன. மணிக்கு 177 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டதாக இந்த பறக்கும் கார் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

ஒரு முறை டேங்கில் எரிபொருள் நிரப்பினால் தரையில் 1200 கிமீ தூரமும், ஆகாயத்தில் 560 கிமீ தூரமும் செல்ல முடியும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நெதர்லாந்தில் உள்ள கில்ஸெ ரெஜன் விமான நிலையத்தில் பிஏஎல்வி பறக்கும் கார்கள் வெற்றிகரமாக சோதனை நடத்தப்பட்டுள்ளது.

புல்வெளி மற்றும் சாலைகளிலிருந்து இந்த பறக்கும் காரை கிளப்பவும், தரையிறக்கவும் முடியும். இதற்கு 540 அடி இடம் இருந்தால் போதுமானது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த பறக்கும் காரை இயக்குவதற்கு 20 முதல் 30 மணிநேரம் பயற்சி தேவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பறக்கும் காரை பாதுகாப்பாக இயக்குவதற்காக செயற்கை கோளுடன் ஒருங்கிணைந்த சிக்னல் சிஸ்டத்தை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் நிதியுதவுடன் தயாரிக்கப்பட்டு வருகிறது. வரும் 2014ம் ஆண்டு முதல் விற்பனைக்கு வரும் இந்த பறக்கும் கார் ரூ.1.34 கோடி விலையில் விற்பனை செய்யப்படவுள்ளது.

பறக்கும் காரை பல்வேறு கோணங்களில் காண இங்கே கிளிக் செய்யவும்

Most Read Articles
English summary
The PAL-V has conducted numerous test flying car over the last two weeks at the Gilze Rijen Airport located in the Netherlands.The new flying car can fly a distance of 560km or drive 1200 km on land using one tank of fuel.
Story first published: Tuesday, April 3, 2012, 12:36 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X