ரூ.5000 கோடியில் புதிய ஆலைக்கு அடிக்கல் நாட்டிய ஃபோர்டு

Ford Endeavour
குஜராத்தில் ரூ.5000 கோடியிலான புதிய ஆலைக்கு அடிக்கல் நாட்டியதாக ஃபோர்டு தெரிவித்துள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த ஃபோர்டு நிறுவனம் சென்னைக்கு அருகில் ஆலை அமைத்து கார் உற்பத்தி செய்து வருகிறது. சென்னையிலிருந்து வெளிநாடுகளுக்கும் கார்களை ஏற்றுமதி செய்து வருகிறது.

அடுத்த கட்டமாக தனது வர்த்தக விரிவாக்கத்தை இந்தியாவில் மேற்கொண்டுள்ளது ஃபோர்டு. இதன்படி, குஜராத்தில் மிகப்பெரிய கார் தொழிற்சாலையை அமைக்கிறது ஃபோர்டு.

ரூ.5000 கோடியில் அமைக்கப்பட இந்த ஆலைக்கு தற்போது அந்த நிறுவனம் அடிக்கல் நாட்டியுள்ளது. இரண்டு ஆண்டுகளில் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ள இந்த புதிய ஆலை வரும் 2014ம் ஆண்டில் உற்பத்தியை துவங்கும்.

உள்நாட்டு தேவை மட்டுமின்றி இந்த புதிய ஆலையிலிருந்து பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யவும் ஃபோர்டு திட்டமிட்டுள்ளது.

புதிய ஆலையில் ஆண்டுக்கு 2.40 லட்சம் கார்களையும், 2.70 லட்சம் எஞ்சின்களையும் உற்பத்தி செய்யும் வகையில் கட்டுகிறது ஃபோர்டு.

Most Read Articles
English summary
Ford India has laid the foundation for its $1billion car plant in India. The American carmaker intends to make its new plant in Gujarat as an export hub where it can build cars that will be sold in India as well as across the globe.
Story first published: Friday, March 23, 2012, 10:49 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X