இந்தியாவை மனதில் வைத்து சிறிய கார்கள் வடிவமைக்கப்படும்: ஃபோர்டு

Ford Figo
எதிர்காலத்தில் குளோபல் பிளாட்பார்மில் வடிவமைக்கப்படும் அனைத்து சிறிய கார்களும் இந்தியாவையும் கணக்கில்க்கொண்டு வடிவமைக்கப்படும் என்று ஃபோர்டு தலைவர் ஆலன் முல்லே கூறியுள்ளார்.

இந்தியா உள்பட ஆசிய நாடுகளில் சிறிய கார்களுக்கு அதிக வரவேற்பு உள்ளது. இதனால், பல முன்னணி நிறுவனங்கள் இந்தியாவை மனதில்கொண்டு வடிவமைத்து வருகின்றன.

இந்த நிலையில், அமெரிக்காவின் ஃபோர்டு நிறுவனத்தின் தலைவர் ஆலன் முல்லே, பிரபல வர்த்தக தளத்திற்கு பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

"உலக அளவில் இந்திய கார் மார்க்கெட்டை எங்களுக்கு மிக முக்கியமானதாக கருதுகிறோம். எங்களது எதிர்கால வளர்ச்சி மற்றும் வெற்றியில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும்.

எனவே, ஒன் ஃபோர்டு பிளாட்பார்ம் என்ற எங்களது நிறுவனத்தின் புதிய மார்க்கெட்டிங் கொள்கையின்படி எதிர்காலத்தில் சிறிய கார்கள் வடிவமைக்கப்படும் போது இந்தியாவும் கணக்கில் கொள்ளப்படும்.

இந்தியாவுக்காக நாங்கள் வடிவமைத்த ஃபிகோ, ஃபியஸ்ட்டா மற்றும் சிறிய எஸ்யூவி ஆகிய மாடல்கள் ஏராளமான மார்க்கெட்டுகளுக்கும் ஏற்றதாக இருக்கிறது.

எனவேதான், சிறிய கார் வடிவமைக்கும்போது இந்தியாவை கணக்கில் எடுத்துக்கொள்வதற்கு மிக முக்கியமான காரணமாக கூறலாம்," என்றார்.

Most Read Articles
English summary
Ford to develop more small cars in global platform with India in mind, says company's CEO Alan Mullay an interview in Business line.
Story first published: Saturday, January 21, 2012, 16:15 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X