புதிய எஸ்யூவிக்காக சென்னை ஆலையில் ரூ.750 கோடி முதலீடு: ஃபோர்டு

Ford Ecosport
புதிய எஸ்யூவி உற்பத்திக்காக சென்னை ஆலையில் ரூ.750 கோடியை முதலீடு செய்ய இருப்பதாக ஃபோர்டு நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்மூலம், 400 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த ஃபோர்டு நிறுவனம் சென்னை அருகேயுள்ள மறைமலை நகரில் ஆலை அமைத்து கார் உற்பத்தி செய்து வருகிறது. இதுவரை ரூ.4,500 கோடி அளவுக்கு இந்த ஆலையில் ஃபோர்டு முதலீடு செய்துள்ளது. இதில், 5,000 தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர்.

இந்த நிலையில், சமீபத்தில் நடந்து முடிந்த டெல்லி ஆட்டோ கண்காட்சியிஸ் ஈக்கோ ஸ்போர்ட் என்ற புத்தம் புதிய காம்பெக்ட் எஸ்யூவியை ஃபோர்டு பார்வைக்கு வைத்திருந்தது. இந்த ஆணடு மத்தியில் இந்த புதிய எஸ்யூவியை ஃபோர்டு விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டிருக்கிறது.

சென்னை ஆலையில் இந்த புதிய எஸ்யூவி உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. சென்னை ஆலையில் புதிய எஸ்யூவிக்காக புதிய உற்பத்தி பிரிவை அமைக்க போர்டு முடிவு செய்துள்ளது. இதற்காக, ரூ.750 கோடியை ஃபோர்டு முதலீடு செய்ய உள்ளது. இதன்மூலம், புதிதாக 400 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

இந்த புதிய முதலீடு குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம், ஃபோர்டு தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் மைக்கேல் போனிஹாம் நேற்று நேரில் சந்தித்து தெரிவித்தார். ஃபோர்டு விரிவாக்கப் பணிகளுக்கு தமிழக அரசு அனைத்து ஒத்துழைப்பையும் வழங்கும் என்று அப்போது முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

Most Read Articles
English summary
Ford planning to invest Rs 750 crore at its Chennai car plant to produce New Eco Sport SUV. The new investment will create 400 jobs in TN.
Story first published: Saturday, January 21, 2012, 11:19 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X