சென்னை ஆலையை ரூ.350 கோடியில் விரிவாக்கம் செய்த ஃபோர்டு

Chennai Ford Plant
சென்னையில் ஆலையின் டீசல் எஞ்சின் உற்பத்தியை கூட்டுவதற்காக ரூ.350 கோடியை ஃபோர்டு முதலீடு செய்துள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த ஃபோர்டு நிறுவனம் சென்னை அருகே மறைமலை நகரில் ஆலை அமைத்து கார் உற்பத்தி செய்து வருகிறது. இந்த நிலையில், டீசல் கார்களுக்கான தேவை கணிசமாக அதிகரித்துள்ளதால், டீசல் எஞ்சின் உற்பத்தியை அதிகரிக்க ஃபோர்டு முடிவு செய்தது.

இதற்காக, சென்னை ஆலையில் உள்ள டீசல் எஞ்சின் உற்பத்தி பிரிவை விரிவாக்கம் செய்துள்ளது ஃபோர்டு. இந்த விரிவாக்கப் பணிகளுக்காக புதிதாக ரூ.350 கோடியை முதலீடு செய்துள்ளதாக ஃபோர்டு அறிவித்துள்ளது. மேலும், இந்த புதிய உற்பத்தி பிரிவின் மூலம் புதிதாக 300 பேருக்கு வேலை கிடைத்துள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

தற்போது ஆண்டுக்கு இந்த ஆலையில் 2.5 லட்சம் டீசல் எஞ்சின்கள் உற்பத்தி செய்யப்ப்டடு வந்த நிலையில், புதிய முதலீடு மூலம் ஆண்டுக்கு 3.5 லட்சம் டீசல் எஞ்சின்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக ஆலை விரிவாக்கம் செய்யப்படுள்ளதாக ஃபோர்டு இந்தியா தலைவர் மைக்கேல் போனிஹாம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Most Read Articles
English summary
Ford India has invested Rs.350 crores for expansion of its diesel engine production capacity at the company's Maraimalainagar plant, near Chennai.
Story first published: Thursday, May 24, 2012, 11:59 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X