250 சிசி மார்க்கெட்டில் களமிறங்கும் ஹயோசங் சூப்பர் பைக்

Hyosung gt250 R
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஹயோசங் ஜிடி250ஆர் ஸ்போர்ட்ஸ் பைக்கை வெகு விரைவில் மார்க்கெட்டில் களமிறக்க கார்வேர் மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.

தென்கொரியாவை சேர்ந்த எஸ்டி மோட்டார்ஸ் நிறுவனம் ஹயோசங் பிராண்டில் ஸ்போர்ட்ஸ் மற்றும் சூப்பர் பைக்குகளை தயாரித்து வருகிறது. சர்வதேச அளவில் பிரபலமான ஹயோசங் பைக்குகளை இந்தியாவில் கார்வேர் மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.

கடந்த ஆண்டு இந்திய சந்தையில் அறிமுகமான ஹயோசங் பிராண்டில் தற்போது ஜிடி650ஆர், ஜிடி650என் ஸ்போர்ட்ஸ் பைக்குகள் மற்றும் எஸ்டி-7 குரூஸர் பைக் மாடல்களை கார்வேர் மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.

இந்த 3 மாடல்களும் ரூ.4 லட்சத்திற்கும் அதிகமான விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தற்போது ரூ.2 லட்சத்தில் ஜிடி250ஆர் ஸ்போர்ட்ஸ்சி ஸ்போர்ட்ஸ் பைக்கை கார்வேர் மோட்டார்ஸ் அறிமுகம் செய்ய உள்ளது.

புதிய ஹயோசங் ஜிடி250ஆர் பைக் 8 வால்வுகள் கொண்ட டிஓஎச்சி தொழில்நுட்பத்துடன் லிக்யூடு கூல்டு எஞ்சினுடன் வருகிறது. இந்த எஞ்சின் 29 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும்.

இந்த புதிய பைக் பஜாஜ் ஆட்டோ விற்பனை செய்து வரும் கவாஸாகி நிஞ்சா 250 மற்றும் ஹோண்டா சிபிஆர் 250 ஆகிய பைக்குகளுக்கு போட்டியை கொடுக்கும் என்று கருதப்படுகிறது. இருப்பினும், புதிய ஜிடி250ஆர் பைக்குக்கு நிர்ணயிக்கப்படும் விலையை பொறுத்தே அது மார்க்கெட்டில் போதிய வரவேற்பை பெறுமா என்பது தெரிய வரும்.

Most Read Articles
English summary
The south korean and Indian Joint venture Garware motors to launch Hyosung gt250r sports bike in India soon. The new gt250r will be equipped with 250cc DOHC engine and it will generate 29 BHP power. The new hyosung gt250r will give tough competetion to Honda CBR250R and Kawasaki Ninja250.
Story first published: Monday, January 30, 2012, 15:15 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X